அடிப்படை ஜாவா பாகம் 11 – Functions and What is Package in Java ?

இந்த பதிவில் நாம் Function with Return Type உதாரணங்களையும் Package களின் பயன்பாடுகளை பற்றியும் கானலாம்
Function களை பற்றி தெரிந்து கொள்ள பாகம் 5 மற்றும் 6 கானலாம்
பாகம் 5
http://www.tamilkadal.com/?p=2639
பாகம் 6
http://www.tamilkadal.com/?p=2685
ஒரு function யை மற்ற ப்ரோக்ராமில் அழைக்கும்பொழுது அந்த Function ல் உள்ள பரோக்ராம் அதனுடைய வேலையை செய்து ஒரு மதிப்பை தரும் அந்த மதிப்பை ஒரு variable ல் பதிவுசெய்து கொள்ள முடியும் அதுவே Function with Return Type எனப்படும்.
அதை ஆங்கிலத்தில் இப்படீ கூறலாம்.
Whenever you call a function which will execute the function body of the program and it will return a value which we can assign to a variable.
package com.practice.function;

class FunctionReturnType {

int a;
int b;
int c;
void setValue(int x, int y) {
a = x;
b = y;
}
int add() {
System.out.println(“The Value of A is ” + a);
System.out.println(“The Value of B is ” + b);
return a + b;
}
}
இந்த உதாரண ப்ரோக்ராமில் setValue and Add என்ற இரண்டு function கள் உண்டு அதில் setValue வில் Return Type ப்பாக void உள்ளது இதற்க்கான அர்த்தம் , அந்த function யை அழைக்கும் பொழுது அதில் உள்ள ப்ரோக்ராமின் வேலையை மட்டும் செய்து விடும் இந்த உதாரண ப்ரோக்ராமில் setValue வின் வேலை x variable ல் உள்ள மதிப்பை Member variable a விற்கு அளிக்கும் y variable ல் உள்ள மதிப்பை member variable b க்கு அளிக்கும். இதனுடைய வேலை அவ்வளவுதான்.
பிறகு add function யை அழைக்கும்பொழுது a Variable ல் உள்ள மதிப்பையும் b Variable மதிப்பையும் ப்ரிண்ட் செய்து காண்பித்து, add function எங்கு அழைக்கப்படுகிறதோ அந்த இடத்தில a மற்றும் b யின் கூட்டுத் தொகையை return என்ற keyword மூலமாக நமக்கு அளித்துவிடும் அந்த மதிப்பை நாம் ஒரு Variable ல் பதிவு செய்துவிடலாம். அதற்க்கான உதாரண ப்ரோக்ராமை கீழே கானலாம்

package com.practice.function;

class AddTester {

public static void main(String[] args) {
FunctionReturnType fun = new FunctionReturnType();
fun.setValue(30, 40);
fun.c = fun.add();
System.out.println(“The Total Value of A & B is ” + fun.c);
}
}
இந்த AddTester என்ற class ல் உள்ள main function ல் FunctionReturnType class க்கு ஒரு fun என்ற Object Variable யை உருவாக்கி , முதலில் setValue function யை fun Object Variable மூலமாக அழைக்கிறோம். மேலே கூறியது போல் அது 30 யை a என்ற member Variable லிலும் 40 யை b என்ற member variable லிலும் பதிவு செய்துவிடும். பிறகு fun Object variable மூலமாக add function யை அழைக்கும்பொழுது a வின் மதிப்பையும் b யின் மதிப்பையும் ப்ரிண்ட் செய்து விட்டு , a மற்றும் b யை கூட்டி return keyword மூலமாக கூட்டுத் தொகையை c என்ற member variable ல் பதிவு செய்து விடுகிறோம். c ஒரு member variable என்பதால் அதையும் member function யைப்போல் Object Variable மூலமாகத்தான் அழைக்க வேண்டும். கடைசியாக SOP மூலம் கூட்டுத் தொகையை ப்ரிண்ட் செய்து பார்க்கிறோம்.

setValue Function என்பது Function without Return Typeக்கான உதாரணம்
add function என்பது Function with Return Type க்கான உதாரணம்.
பேக்கேஜ் என்பது என்ன மற்றும் அதன் பயன்கள்?

தமிழில் ஜாவா Pacakge களை பற்றிஇதுவரை நாம் பார்த்த அனைத்து ஜாவா உதாரணங்கள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்ப்பட்ட உதாரண ப்ரோக்ராம்களே. இங்கு பேக்கேஜ்க்கு பெரிய அளவு பயன்கள் இல்லை. உதாரணமாக நாம் ஒரு 150 ஜாவா file களை உருவாக்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதில் கண்டிப்பாக அனைத்தும் ஒரே வகையான ப்ரோக்ராம்களாக இருக்காது. இப்படி இந்த 150 ஜாவை fileயைம் ஒரே இடத்தில் இருந்தால் அது ஒழுங்கான முறையல்ல. இந்த 150 ஜாவை fileயையும் ஒழுங்கு படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்(Organizing Properly) இந்த மாதிரியான சமையங்களில் பேக்கேஜ் முறையை கையால வேண்டும்.

உதாரணமாக 150 ஜாவா fileகளில் 50 file ஜாவா variable களை பற்றியும் மற்ற 50 file ஜாவா function without return type களை பற்றியும் மற்ற 50 file ஜாவா function with return type களை பற்றியும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த file களை இப்படி ஒழுங்கு(Organize) செய்யலாம்.

org = ஆரம்ப பேக்கேஜ் பெயர் root Package பேக்கேஜ் பெயர் என்ன வேணடுமானாலும் இருக்கலாம்
javapractice = நம் ஜாவா ப்ராஜக்ட் பெயரை இரண்டாவதாக பேக்கேஜ் கொடுத்துள்ளேன்
variables = இந்த பேக்கேஜ் இல் variable களுக்கான உதாரணங்கள் இருக்கம்.
function = function களை பற்றி அனைத்து ப்ரோக்ராம்களுதம் இதற்குகீழ் இருக்கம்
withoutreturn = இந்த பேக்கேஜீல் Function without return டைப்புக்கான உதாரணங்கள் இருக்கும்
withreturn = இந்த பேக்கேஜீல் Function with return க்கான உதாரணங்கள் இருக்கம்

மேலே குறிப்பிட்ட பேக்கேஜ் பெயர்கள் நம் விருப்ப பெயர்களே அதாவது உங்களுடைய Project name மற்றும் வேவ்வேறு வகையான ஜாவா file களுக்கு ஏற்றவாறு நீங்கள் பேக்கேஜ் பெயர் கொடுத்து பேக்கேஜை அமைக்க வேண்டும்(Package Structure)
மேற்கூறிய பேக்கேஜுகளை அமைக்கும்போது கீழ்க்காணுமாறு இருக்கும்
org.javapractice-varables = இங்கு அனைத்து variable களுக்கான ப்ரோக்ராம்.
org.javapractice.function = இங்கு அனைத்து function களுக்கான ப்ரோக்ராம். இதையே இரண்டு வகையாக பிரித்துள்ளோம் அதாவது இதற்க்கு கீழ் இரண்டு பேக்கேஜுகள் வரும்.
org.javapractice.function.withoutreturn = இதற்க்கு கீழ் Function without return டைப்புக்கான உதாரணங்கள் இருக்கும்.
org.javapractice.function.withreturn = இதற்க்கு கீழ் Function with return க்கான உதாரணங்கள் இருக்கம்.

Download Java Practice Source Code

அடுத்த பதிவில் உதாரணங்களுடன் கானலாம் நன்றி.. வாழ்க வளமுடன்


ஜாவா மற்றும் கணிணி சம்ந்தமான அனைத்து தகவல்களைப் பற்றி அறிய மற்றும் நீங்களும் உங்களுக்கு தெரிந்த விசயங்களை பதிய, கீழ்கானும் முக நூல் (Facebook) குழுமத்தில் இனையுமாறு தாழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்

குழுமத்தின் பெயர் – கணிணி ப்ரோக்ராமர்ஸ் தமிழ் சங்கம் (Computer Programmer’s Tamil Community)
குழுமத்தின் லிங்க் – இதை click செய்து குழமத்தின் உள்ளே நுழைந்து இனையவும்
https://www.facebook.com/groups/391147894320903/

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro