அடிப்படை ஜாவா பாகம் 12 – Java Packages and Operator

இந்த பதிவில் சில பேக்கேஜ்களை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்

java pacakge creation in tamilகீழே குறிப்பிட்ட அமைப்பில் பேக்கேஜ்களை எப்படி உருவாக்குவது என்று பரார்போம்.
com.practice
com.practice.function.withoutreturn
com.practice.function.withreturn
com.practice.operator

கீழ்காணும் லிங்கில் சென்று பேக்கேஜை எப்படி உருவாக்குவது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
http://www.tamilkadal.com/?p=2905

மேலே குறிப்பிட்டுள்ள பேக்கேஜ்களை உருவாக்கியவுடன் கீழ்காணும் படத்தின் அமைப்புப்போல் இருக்கும்

java pacakge creation steps in tamilcom.practice ல் AddTester.java என்ற ஜாவா file யையும் இந்த file ன் பயன் அனைத்து பேக்கேஜ்களின் உள்ள ஜாவா file ன் விடையை காண பயன்படும்

com.practice.function.withoutreturn – இந்த பேக்கேஜில் FunctionWithoutReturnType.java என்ற file ம் உள்ளது
com.practice.function.withreturn – இந்த பேக்கேஜில் FunctionReturnType.Java என்ற file ம் உள்ளது.
com.practice.operator – இந்த பேக்கேஜில் PlusOperator.Java என்ற file ம் உள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள நான்கு ஜாவா file ல் உள்ள ப்ரோக்ராம் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதால் , பேக்கேஜ் என்ற முறையை பயன்படுத்தி நான்கு இடத்தில் தனி தனியாக உருவாக்கியுள்ளேன். அதன் அமைப்பை கீழ்காணும் படத்தில் காணலாம். ஒரு பேக்கேஜ்க்குள் ஒரு ஜாவை file யை உருவாக்க கீழ்காணும் லிங்கை பார்க்கவும்.
http://www.tamilkadal.com/?p=2905

 

java package creation step2package com.practice.function.withoutreturn;
இங்கு குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பேக்கேஜ் பெயரும் உங்கள் கணிணியில் ஒரு Folder அல்லது Directory ஆக இருக்கும். என்னுடைய கணிணியில் கீழ்காணும் மாறு இருக்கிறது.
Java-Practice\src\com\practice\function\withoutreturn
இங்கு src என்பதின் விரிவாக்கம் Source அகும் இதன் பொருள் ஒரு ஜாவா ப்ராஜக்ட்டின் அனைத்து பேக்கேஜ் அமைப்புகள் மற்றும் ஜாவா file கள் இதன் கீழ்தான் இருக்கும். நம்முடைய உதாரண src folder க்கு கீழ் கீழ்காணும் பேக்கேஜ்கள் மற்றும் ஜாவா file கள் அமைந்துள்ளன.
பேக்கேஜ்கள் – com,practice,function,withoutreturn,withreturn,operator
ஜாவா class file கள் – AddTester, FunctionWithoutReturnType, FunctionReturnType and PlusOperator

ஒரு குறிப்பிட்ட ஜாவா class யை ஒரு பேக்கேஜ்க்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்றால் அந்த ஜாவா class ன் ஜாவை file யை அந்த குறிப்பிட்ட folder க்கு கீழ் உருவாக்க வேண்டும் பிறகு package என்ற keyword உதவியுடன் அந்த பேக்கேஜின் முழு folder அமைப்பையும் . (புள்ளியிட்டு) dot separator உதவியுடன் அமைக்கவேண்டும் உதாரணமாக
Java-Practice\src\com\practice\function

இங்கு நம் பேக்கேஜ் ஆரம்பிக்கும் இடம் com எனவே உங்கள் ஜாவா பரோக்ராமில் package என்ற keyword க்கு பிறகு உங்கள் முழு பேக்கேஜ் அமைப்பையும் குறிப்பிட வேண்டும். கீழே உள்ள உதாரணத்தின்படி FunctionWithoutReturnType என்ற ஜாவை file Java-Practice\src\com\practice\function\withoutreturn என்ற folder க்கு கீழ் இருக்கும் அதனுடைய class அமைப்பு com.practice.function.withoutreturn பேக்கேஜ்க்கு கீழ் இருக்கும்

package com.practice.function.withoutreturn;
public class FunctionWithoutReturnType {

public void show() {
System.out.println(“This is function without Return value example……”);
}
}
இவ்வாறு மற்ற உதாரண ப்ரோக்ராம்களும் உருவாக்கியுள்ளோம்

package com.practice.function.withreturn;

public class FunctionReturnType {

int a;
int b;
public void setValue(int x, int y) {
a = x;
b = y;
}
public int add() {
System.out.println(“The Value of A is ” + a);
System.out.println(“The Value of B is ” + b);
return a + b;
}

}

package com.practice.operator;

public class PlusOperator {

public void add(int a , int b) {
System.out.println(“The Total ” + a + b);
}

public void concat(int a , String name) {
System.out.println(name + a);
}
}

package com.practice;

import com.practice.function.withoutreturn.FunctionWithoutReturnType;
import com.practice.function.withreturn.FunctionReturnType;
import com.practice.operator.PlusOperator;

class AddTester {

public static void main(String[] args) {
FunctionReturnType fun1 = new FunctionReturnType();
fun1.setValue(30, 40);
int total = fun1.add();
System.out.println(“The Total Value of A & B is ” + total);

FunctionWithoutReturnType fun2 = new FunctionWithoutReturnType();
fun2.show();

PlusOperator fun3 = new PlusOperator();
fun3.add(20, 30);
fun3.concat(20, “Suresh Kesava “);
}
}

AddTester என்ற class ன் மூலம் அனைத்து பேக்கேஜ்களில் உள்ள ஜாவா class க்கு Object variableயை உருவாக்கி அதனுடைய function களை அழைத்து விடையை காண்கிறோம்.
AddTester ஜாவா class இருப்பது ஒரு பேக்கேஜ் மற்ற class கள் இருப்பது வேறொரு பேக்கேஜ். வேறொரு பேக்கேஜில் உள்ள ஒரு ஜாவா classயை மற்றொரு பேக்கேஜில் உள்ள ஒரு ஜாவா classயை பயன்படுத்த வேண்டும் என்றால் கீழ்காணும் விதிமுறையை பின்பற்ற வேண்டும்.

பயன்படுத்தப்படும் அல்லது அழைக்கப்படும் class public class ஆக இருக்க வேண்டும்,
உதாரணமாக public class PlusOperator இப்படி ஜாவா class யை உருவாக்க வேண்டும்.
மற்ற ஜாவை class யை அழைக்கும் class ல் import என்ற keyword யை பயன்படுத்தி மற்ற class களை அழைக்க வேண்டும்
உதாரணமாக import com.practice.operator.PlusOperator;

பேக்கேஜ் முடிவுற்றது. இனி வரும் அனைத்து உதாரண ப்ரோக்ராம்களும் பேக்கேஜ் கொணடே பார்ப்போம்.
PlusOperator class சிறிய விளக்கம்
இந்த class ல் கீழ்காணும் இரண்டு function கள் உள்ளது.
public void add(int a , int b) {
System.out.println(“The Total ” + (a + b));
}

public void concat(int a , String name) {
System.out.println(name + a);
}
add function ல் + operator a மற்றும் c ன் கூட்டுத்தொகையை கொடுக்கும்.
concat function ல் + operator “name” மற்றும் c variable களை இனைக்கும். + Operator ன் இடது மற்றும் வலது பக்கதில் number அல்லாத variable டைப்புகள் இருக்கும் பொழுது , + operator அந்த variable களின் மதிப்பை இனைக்கும். + Operator இரு பக்கமும் உள்ள variable கள் number டைப்பாஆக இருந்தால் + operator கூட்டு தொகையை அளிக்கும்.

Download Source Code

அடுத்த பதிவில் ஜாவாவின் அனைத்து operator களையும் கானலாம்.

நன்றி வாழ்க வளமுடன்

 


ஜாவா மற்றும் கணிணி சம்ந்தமான அனைத்து தகவல்களைப் பற்றி அறிய மற்றும் நீங்களும் உங்களுக்கு தெரிந்த விசயங்களை பதிய, கீழ்கானும் முக நூல் (Facebook) குழுமத்தில் இனையுமாறு தாழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்

குழுமத்தின் பெயர் – கணிணி ப்ரோக்ராமர்ஸ் தமிழ் சங்கம் (Computer Programmer’s Tamil Community)
குழுமத்தின் லிங்க் – இதை click செய்து குழமத்தின் உள்ளே நுழைந்து இனையவும்
https://www.facebook.com/groups/391147894320903/

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro