அடிப்படை ஜாவா – பாகம் 14 ஆப்பரேட்டர்ஸ் – Java Operators in Tamil

Java operators in tamilஈக்வாலிட்டி மற்றும் ரிலேஷனல் ஆப்பரேட்டர்ஸ் (Equality and Relational Operators)
ஈக்வாலிட்டி மற்றும ரிலேஷனல் ஆப்பரேட்டர் என்பது ஒரு Variable களில் உள்ள மதிப்பை மற்ற variable களிலோ அல்லது வேறொரு மதிப்புகளிலோ Compare செய்து பார்க்க வேண்டும் என்றால் இந்த ஆப்பரேட்டர்களை நாம் பயன் படுத்தவேண்டும்.

ஈக்வாலிட்டி ஆப்பரேட்டர்
==   equal to
!=   not equal to
ரிலேஷனல் ஆப்பரேட்டர்
>    greater than
>=   greater than or equal to
<    less than
<=   less than or equal to
உதாரணமாக
int a =10;
int b = 10;
a == 20
b == a;

மேலே உள்ள a என்ற variable லின் மதிப்பு 20 என்ற மதிப்புடன் ஒத்துபோகிறாதா என்று பார்க்க பயன்படுகிறது. இவ்வாறு Compare செய்யும் ஆப்பரேட்டரே ஈக்வாலிட்டி ஆப்பரேட்டர்கள் என்று ஆழைக்கப்படுகிறது.
அடுத்த உதாரணத்தில் b variable லின் மதிப்பு a variableலின் மதிப்புடன் ஒத்துபோகிறதா என்று Compare செய்யப்படுகிறது.
a > 20;
இந்த உதாரணம் ஒரு a Variable லில் உள்ள மதிப்பு 20தை வீட அதிகமாக உள்ளதா என்று Compare செய்ய பயன்படுகிறது.
a < b;
இந்த உதாரணம் a Variable லில் உள்ள மதிப்பு b யை வீட குறைவாக உள்ளதா என்று கண்டறிய பயன்படுகிறது. இவையே ரிலேஷனல் ஆப்பரேட்டர்களின் பயன்பாடு.

கண்டிஷனல் ஆப்பரேட்டர் ஸ் (Conditional Operators)

&&   AND ஆப்பரேட்டர்
||   OR ஆப்பரேட்டர்
?:   Ternary ஆப்பரேட்டர் -- அடுத்த பதிவில் விளக்கப்படும்.

ஈக்வாலிட்டி மற்றும் ரிலேஷனல் ஆப்பரேட்டர்களை பயன்படுத்தி ஒரு மதிப்பை மற்றொரு மதிப்புடன் compare செய்யலாம் என்று பார்த்தோம். கண்டிஷனல் ஆப்பரேட்டர் என்பது இரண்டு அல்லது இரண்டிற்க்கு மேற்பட்ட variable களின் மதிப்பை compare செய்வதற்கு பயன்படுகிறது.
உதாரணமாக
&&  AND ஆப்பரேட்டர்
a == 10 && b == 10
a விலும் b விலும் 10 என்ற மதிப்பு இருக்கிறதா அல்லது இல்லையா என்று Compare செய்ய உதவுகிறது
|| OR ஆப்பரேட்டர்
a == 10 || b == 10
a அல்லது b எதாவது ஒரு Variable லில் 10 என்ற மதிப்பு இருக்கிறதா அல்லது இல்லையா என்று Compare செய்ய உதவுகிறது

இந்த ஆப்பரேட்டர்களின் விளக்கத்தை if Statement மூலமாக தெளிவாக புரிந்துக் கொள்லலாம்
if, else Statements
if(Condition) கண்டிஷன் ஒத்துப்போனால் if க்கு உள்ளே  உள்ள ப்ரோக்ராம் வேலை செய்ய வேண்டும்
சில ப்ரோக்ராம்
else ஒத்துபோகவில்லை என்றால் else உள்ளே  உள்ள ப்ரோக்ராம் வேலை செய்ய வேண்டும்.
சில பரோக்ராம்

இந்த if else statement களுடன் ஈக்வாலிட்டி ஆப்பரேட்டர், ரிலேஷனல் ஆப்பரேட்டர், கண்டிஷனல் ஆப்பரேட்டர்களை வைத்து ஒரு முழுமையான பரோக்ராமை விளக்கத்துடன் பார்ப்போம்

public class IFStatement {

public static void main(String args[]){

int a = 10;
int b = 20;

if(a == 10) { a வின் மதிப்பு 10 ஆக இருந்தால் The value of A is Ten என்று ப்ரிண்ட் செய் இல்லை என்றால் else க்குள் சென்றுவிடு  என்று அர்த்தம்
System.out.println(“The value of A is Ten” );
}else{ a வின் மதிப்பு 10 ஆக இல்லை என்றால் The value of A is not Ten என்று ப்ரிண்ட் செய் என்று அர்த்தம்
System.out.println(“The value of A is not Ten” );
}
if(a == 10 && b == 10) {
a வின் மதிப்பு 10 ஆகவும் b யின் மதிப்பு 10 ஆகவும் இருந்தால் மட்டுமே A and B values are 10 என்று ப்ரிண்ட் செய் என்று சொல்கிறோம். இந்த கண்டிஷனை பொருத்தவரை if க்குள் வராது ஏனெனில் a யின் மதிப்பு 10 மற்றும் b யின் மதிப்பு 20 எனவே கண்டிஷன் பொருந்தவில்லை. else க்குள் சென்று விடும்.
System.out.println(“A and B values are 10”);
}else{
if கண்டிஷன் ஒத்துபோகவில்லை என்றால் A and B values are not 10 என்று ப்ரிண்ட் செய் என்கிறோம்.
System.out.println(“A and B values are not 10”);
}
&& அண்ட் ஆப்பரேட்டரை பொருத்தவரை if ல் உள்ள இரண்டு கணட்ஷன்களுமே ஒத்துபோக வேண்டும் அப்பொழுதுதான் if ல் உள்ள ப்ரோக்ராம் வேலை செய்து விடையை அளிக்கும். இல்லை என்றால் else இல் சென்று அதில்லுள்ள ப்ரோக்ராம் ப்ரிண்ட் செய்துவிடும்.

if(a == 10 || b == 10) {
a அல்லது b யின் ஏதாவது ஒரு variable லின் மதிப்பு 10 ஆக இருந்தலே போதும் if ல் உள்ள ப்ரோக்ராம் வேலை செய்து விடையை அளிக்கும். இந்த கண்டிஷனை பொருத்தவரை if க்குள் வந்து A and B values are 10 தை ப்ரிண்ட் செய்து விடும். ஏனெனில் எதாவது ஒரு variable ன் மதிப்பு ஒத்துப்போனால் போதும். a வின் மதிப்பு 10 ஆக இருப்பதால் இதற்குள் வந்து விடும்.
System.out.println(“A and B values are 10”);
}else{
இரண்டு Variable களின் மதிப்புமே ஒத்துபோகவில்லை என்றால் இதை ப்ரிண்ட் செய்துவிடும்.
System.out.println(“A and B values are not 10”);
}
}

package com.practice.operator.conditional;

public class IFStatement {

	public static void main(String args[]){

		int a = 10;
		int b = 20;

		if(a == 10) {
			System.out.println("The value of A is Ten" );
		}else{
			System.out.println("The value of A is not Ten" );
		}

		if(a == 10 && b == 10) {
			System.out.println("A and B values are 10");
		}else{
			System.out.println("A and B values are not 10");
		}

		if(a == 10 || b == 10) {
			System.out.println("A and B values are 10");
		}else{
			System.out.println("A and B values are not 10");
		}

	}
}

இந்த லிங்கை click செய்து தரவிறக்கம் செய்துக்கொள்ளவும்
Download Java-Practice Source Code

அடுத்த பதிவிலும் ஆப்பரேட்டர்கள் தொடரும்.


ஜாவா மற்றும் கணிணி சம்ந்தமான அனைத்து தகவல்களைப் பற்றி அறிய மற்றும் நீங்களும் உங்களுக்கு தெரிந்த விசயங்களை பதிய, கீழ்கானும் முக நூல் (Facebook) குழுமத்தில் இனையுமாறு தாழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்

குழுமத்தின் பெயர் – கணிணி ப்ரோக்ராமர்ஸ் தமிழ் சங்கம் (Computer Programmer’s Tamil Community)
குழுமத்தின் லிங்க் – இதை click செய்து குழமத்தின் உள்ளே நுழைந்து இனையவும்
https://www.facebook.com/groups/391147894320903/

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro