அன்பு செய்வாரை இறைவன் அறிவான் – திருமூலர்

திருமூலர் திருமந்திரம் பாடல்கள்இன்பத்திலும் துன்பத்திலும் இறைவனை மறவாது அன்பு கொண்டு ஒழகுவோரை அவன் அறிந்து அருள்புரிவான் என்று உண்மையை இங்கே உறைக்கிறார்.

 
இழந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்தன்பு செய்யும் அருளது ஆமே. – திருமந்திரம் 280

உயிர்களனைத்தும் தன்னிடம் அன்புகொள்ளாமல் இகழ்ந்திருதலையும் அன்பு கொண்டு பெற்றதையும் இறைவன் அறிவான் அன்பின் நிலைகேற்பத் தூயவனான் அவன் விரும்பி அருள்புரிவான் மேலும் தன்பால் அன்பு வளர்ந்து அருள் நிறைந்து கனிந்தவர்களுக்கு இறைவன் மகிழ்ந்து உறவாகி அருளொளியைத் தருவான்.

  
 இன்பம் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பில் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்புஅப் பிறவி முடியது தானே. – திருமந்திரம் 281

இந்த பிறவியில் மாந்தர் அன்பு செய்து அருளின்பம் பெறவே இறைவன் அருள் நெறியை படைத்தான் என்றாலும் மக்கள் மருள்வழியில் சென்று தீவினைகள் பல செய்து பிறவியினைத் துன்பமாக்கிவிட்டனர். இருப்பினும் இறைவனாகிய உயிர்த் தலைவனிடம் அன்புகலந்து உறவாடினால் அவன் அருளாற்றலினால் மாந்தனுடைய பிறவி வாழ்க்கையை இன்பமாகவே முடித்துக் காட்டுவான்.


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் பக்கத்தை (Facebook Page) உங்கள் விருப்ப பக்கமாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் பக்கத்தின் லிங்க் தமிழ் கடல் – Tamil Blog Site இதை click செய்து பக்கத்தின் உள்ளே நுழைந்து LIKE செய்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
தமிழ் கடல்

தமிழ் கடல் முகநூல் குழுமம்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro