அடிப்படை ஜாவா – பாகம் 13 ஆப்பரேட்டர்ஸ் – Java Operators in Tamil

ஜாவா operators தமிழில்இந்த பதிவில் நாம் ஜாவா அப்பரேட்டர்ஸ்களைப்ற்றி பார்ப்போம்

அப்பரேட்டர் என்றால் என்ன? வழ்க்கமாக ஒரு கருவியை பயன்படுத்த தெரிந்த நபரையே ஆப்பரேட்டர் என்று அழைக்கப்படுகிறது. ஜாவாவில் variable களை கையாளக்கூடிய அனைத்துப் பொருள்களும் operator என்று அழைக்கப்படுகிறது Java operators can manipulate the Variable in several ways.

உதாரணமாக கீழ்க்கானும் சிறிய ஜாவா ப்ரோக்ராமில் a என்ற Variable லில் 10 என்ற மதிப்பை assignment என்ற ஆப்பரேட்டர் மூலமாக அளிக்கிறோம்.இந்த assignment ஆப்பரேட்டர் உதவி இல்லாமல் ஒரு variable க்கு மதிப்பு அளிக்க முடியாது.
int a;
a = 10;

இதேபோல் ஜாவில் பல ஆப்பரேட்டர்கள் ஒவ்வொரு வகையில் variable களை கையாளப் பயன்படுகிறது.
ஜாவா ஆப்பரேட்டர்களின் வகைகள்

1.அரித்மெட்டிக் ஆப்பரேட்டர்ஸ்(Arithmetic Operators)
2.அசைன்மன்ட் ஆப்பரேட்டர்ஸ் (Simple Assignment Operator)
3.யுனரி ஆப்பரேட்டர்ஸ் (Unary Operators)
4.இக்வாலிட்டி மற்றும் ரிலேஷனல் ஆப்பரேட்டர்ஸ் 
 (Equality and Relational Operators)
5.கண்டிஷனல் ஆப்பரேட்டர்ஸ் (Conditional Operators)

இந்த ஆப்பரேட்டர்களை எப்படி பயன்படுத்து என்று பார்ப்போம்

அசைன்மன்ட் ஆப்பரேட்டர் (Simple Assignment Operator)
அசைன்மன்ட ஆப்பரேட்டர் என்பது = குறியீடு இது ஒரு Variable க்கு மதிப்பை அளிக்கப் பயன்படுகிறது.
உதாரணமாக
int a = 10;
String name =”Tamil Kadal”;
இங்கே = குறியீடு மூலமாக 10 என்ற மதிப்பை a என்ற Variable க்கும், Tamil Kadal என்ற மதிப்பை name என்ற variable க்கும் அளிக்கிறோம். இதவே அசைன்மன்ட் ஆப்பரேட்டரின் பயன்.

அரித்மெட்டிக் ஆப்பரேட்டர் (Arithmetic Operators)

+  இது இரண்டு நம்பர்களை கூட்ட மற்றும் String variable களை இனைக்க   
  பயன்படுகிறது. 
  இதன் பெயர் Plus Operator என்று அழைக்கப்படுகிறது
-  இது இரண்டு நம்பர்களை கழிக்க பயன்படுகிறது. 
  இதன் பெயர் minus Operator என்று அழைக்கப்படுகிறது
*  இது இரண்டு நம்பர்களை பெருக்க பயன்படுகிறது. இது multiple operator 
  என்று அழைக்கப்படுகிறது
/  இது வகுக்க பயன்படுகிறது இது divided operator என்று ஆழைக்கப்படுகிறது
%  இது வகுத்து கிடைக்கும் மீதி தொகையை கண்டுபிடிக்க பயன்படுகிறது. 
  இது Modules Operator என்று அழைக்கப்படுகிறது. 

கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணப் ப்ரோக்ராம்மை பார்த்து நீங்களே இதேபோல் ஒரு ஜாவா file யை உருவாக்கி செய்து பாருங்கள்

package com.practice.operator;

public class Operators {

	public static void main(String args[]) {

		int a = 10; // This is for equals operator example
		int b = 20;
		int add = a + b; // This is for plus operator example
		System.out.println("Add Value  " + add);
		int subtract = b - a; // This is for subtract example
		System.out.println("Subtract Value " + subtract);
		int multiple = a * b; // This is for Multiple example
		System.out.println("Multile Value " + multiple);
		int divided = b/a; // This fir divided example
		System.out.println("Divided Value...... " + divided);
		int modules = b%a;
		System.out.println("Modules Value " + modules);

	}
}
Output:
Add Value  30
Subtract Value 10
Multiple Value 200
Divided Value...... 2
Modules Value 0

இந்த உதாரணத்தின் மூலமாக அரித்மெட்டிக் ஆப்பரேட்டரை(Arithmetic Operators) புரிந்து கொண்டுருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

யுனரி ஆப்பரேட்டர் (Unary Operators)
யுனரி ஆப்பரேட்டரை இருவகையாக பிரிக்கலாம் அவை Increment and Decrement ஆப்பரேட்டர்கள். இந்த ஒவ்வொன்றையும் மேலும் இருவைகையாக பிரிக்கலாம்.
Increment = Post Increment and Pre Increment
Decrement = Post Decrement and Pre Decrement
இந்த ஆப்பரேட்டர்களை கொண்டு ஒரு variable ன் மதிப்பை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்.
int a = 10;
a++ அல்லது ++a
int y = 10;
y– அல்லது –Y
ஒரு Variable க்கு முன்பக்கமாகவோ(Prefix) அல்லது பின்பக்கமாகவோ(Suffix) இந்த ஆப்பரேட்டர்களை பயன்படுத்த வேண்டும்.
இந்த ஆப்பரேட்டரை variable க்கு முன்பக்கமாக பயன்படுத்தினால் அதை Pre Increment /Pre Decrement என்று அழைக்க வேண்டும் அதாவது ++variable or –variable
இந்த ஆப்பரேட்டரை variable க்கு பின்பக்கமாக பயன்படுத்தினால் அதை Post Increment /Post Decrement என்று அழைக்க வேண்டும் அதவது variable++ or variable–

இதன் பயன்களை இந்த உதாரணப் ப்ரோக்ராம் மூலம் பார்ப்போம்

package com.practice.operator.unaryoperators;
public class Increment {

	public static void main(String args[]) {

		// Post Increment example
		int a = 10;
		System.out.println("The Value of A Post Increment  " + a);
		int b = a++;
		System.out.println("The Value of A is " + a);
		System.out.println("The Value of B is " + b);

		// Pre increment Example
		int x = 10;
		System.out.println("The Value of Pre increment " + x);
		int y = ++x;
		System.out.println("The Value of X is " + x);
		System.out.println("The Value of Y is " + y);

	}
}

இந்த ப்ரோக்ராமின் விளக்கம்
package com.practice.operator.unaryoperators;
public class Increment {

public static void main(String args[]) {

இந்த ஆப்ரேட்டர் a என்ற variable லில் உள்ள 10 என்ற மதிப்பை b க்கு அளித்து பிறகு a வின் மதிப்பை ஒன்று உயர்த்தும் அதாவது a வின் மதிப்பை 11 ன்றாக அதிகப்படுத்தும். இதுவே Post Increment ன் பயன்பாடு.
The Post increment Operator assigns the current value of the variable to another variable and increase the one value to current variable this is called Post Increment.
முதலில் மதிப்பை மற்ற variable களுக்கு வழங்கும் பிறகு ஒன்று உயர்த்தும் இதுவே Post increment ன் பயன்பாடு.

// Post Increment example
int a = 10;

System.out.println(“The Value of A Post Increment ” + a);  a  வின் மதிப்பு பத்து என்று ப்ரிண்ட் செய்யும்
int b = a++;
இங்கு a வின் மதிப்பான 10 தை b க்கு அளித்த பிறகு a வின் மதிப்பை ஒன்று உயர்த்தும்
System.out.println(“The Value of A is ” + a); a வின் மிதிப்பு 11 ஆக இருக்கும்.
System.out.println(“The Value of B is ” + b); b யின் மதிப்பு 10 ஆகத்தான் இருக்கம் ஏனெனில் இந்த Post Increment ++ ஆப்பரேட்டர் 10 என்ற a யின் மதிப்பை b க்கு அளித்து பிறகுதான் a வின் மதிப்பை 11 ஆக உயர்த்தும்.

Pre Increment ஆப்பரேட்டர் என்பது Post Increment க்கு எதிர்மறையானது. அதாவது இந்த ஆப்ரேட்டர் ஒரு variable ன் மதிப்பை ஒன்று உயர்த்திய பின் மற்ற variable க்கு அதன் மதிப்பை அளிக்கும் இதுவே Pre Increment ஆப்பரேட்டர் எனப்படும்.
The Operator first increase the variable value then, assigns the value to another variable. This is called as Pre Increment.
முதலில் மதிப்பை உயர்த்து பிறகு மற்ற variableக்கு மதிப்பை வழங்கு இதுவே Pre increment எனப்படுகிறது.

// Pre increment Example
int x = 10;
System.out.println(“The Value of Pre increment ” + x); x ன் மதிப்பு 10 ஆக ப்ரிண்ட் செய்யும்.
int y = ++x;
இங்கு ++ என்ற Pre increment ஆப்பரேட்டர் x ன் ஒரு மதிப்பை உயர்த்தி அதாவது x ன் மதிப்பை 10 லிருந்து 11 ஆக மாற்றி அந்த 11 என்ற மதிப்பு yக்கு வழங்கப்படும்.
System.out.println(“The Value of X is ” + x); x ன் மதிப்பு 11 ஆக ப்ரிண்ட் செய்யும்

System.out.println(“The Value of Y is ” + y); y யின் மதிப்பு 11 ஆக் ப்ரிண்ட் செய்யும் ஏனெனில் Pre Increment xன் மதிப்பை உயர்த்திய பிறகுதான் அதாவது x ன் மதிப்பு 11 ஆக மாறிய பின்பு தான் Y க்கு அதன் மதிப்பை வழங்குகிறது.
}
}
இந்த உதாரண ப்ரோக்ராமிற்க்கான விடை
The Value of A Post Increment 10
The Value of A is 11
The Value of B is 10
The Value of Pre increment 10
The Value of X is 11
The Value of Y is 11

இதே முறையில்தான் Post Decrement and Pre Decrement பயன்படுத்தப் படுகிறது. இதற்க்கான அனைத்து உதாரண ப்ரோக்ராம்களை இந்த லிங்கின் மூலம் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

Download Java Source Code

அடுத்த பதிவிலும் ஆப்பரேட்டர்கள் தொடரும்.

 


ஜாவா மற்றும் கணிணி சம்ந்தமான அனைத்து தகவல்களைப் பற்றி அறிய மற்றும் நீங்களும் உங்களுக்கு தெரிந்த விசயங்களை பதிய, கீழ்கானும் முக நூல் (Facebook) குழுமத்தில் இனையுமாறு தாழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்

குழுமத்தின் பெயர் – கணிணி ப்ரோக்ராமர்ஸ் தமிழ் சங்கம் (Computer Programmer’s Tamil Community)
குழுமத்தின் லிங்க் – இதை click செய்து குழமத்தின் உள்ளே நுழைந்து இனையவும்
https://www.facebook.com/groups/391147894320903/

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro