ஆற்றல் தரும் காளி தியானம் – புலிப்பாணி ஜாலத்திரட்டு
தானையா காளியுட தியானங் கேளு
தயவான அரிகாளி யாகாச காளி
ஊனையா ஓடி காளி வீரகாளி
உற்பனமாஞ் சூல கபால காளி
மூனையா மோடி தேவி பூமி காளி
முதன்மையாம் ஓங்காளி வோம் பிடாரி
வானையா மாகாளி போடி காளி
வளமான மந்திரமா காளி பெண்ணே – புலிப்பாணி ஜாலத்திரட்டு 99
அன்னை காளிகா தேவியின் தியானத்தின் ஆற்றலை கூறுகிறேன் கேள் அரிகாளி, ஆகாச காளி, ஓடி காளி , வீரகாளி , சூல கபால காளி , மோடி தேவி , பூமி காளி, ஓங்காளி ஓம் பிடாரி, மாகாளி, போடி காளி மந்திர காளி.
எண்ணவே ஒம் ஆம் கோதண்ட ரூபி
எளிதான யாளிவா கனத்திலேறி
வெண்ணவே யரசரோடு சபைகள் மெச்ச
விருதலகை கொடியுடன் வேதாளஞ் சூழ
அண்ணவே யாங்கார சத்தி கொண்டு
அடைவாக வாவென்று லட்சமோதி
பண்ணவே பூசைசெய்து வெள்ளி தோறும்
பாங்காகச் செய்தக்கற் சித்தி யாமே – புலிப்பாணி ஜாலத்திரட்டு 100
ஒம் ஆம் கோதண்ட ரூபி ஆளி வாகனத்தில் ஏறி சபையோர்கள் மெச்ச இருப்பக்கமும் விருதலகை கொடியைப் பிடித்தபடி வேதாளங்கள் சூழ, ஆங்கார சக்தி கொண்டு வா என்று இலட்சம் தடவைகள் ஒதி, பூஜை செய்யவும். இதனை வெள்ளிக்கிழமைகளில் செய்தால் கடினமான செயல்களெல்லாம் கைகூடி சித்தியாகுமாம்.
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் பக்கத்தை (Facebook Page) உங்கள் விருப்ப பக்கமாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் பக்கத்தின் லிங்க் தமிழ் கடல் – Tamil Blog Site இதை click செய்து பக்கத்தின் உள்ளே நுழைந்து LIKE செய்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
தமிழ் கடல்
தமிழ் கடல் முகநூல் குழுமம்