எரிபொருள் இல்லாமல் பறக்கும் ஜெட் விமானங்கள்

எரிபொருள் இல்லாமல் பறக்கும் ஜெட் விமானங்கள்நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஜான் ஸ்ட்ரட் 1883 இல் ஒரு யோசனையை முன் கொண்டுவந்தார். அதாவது காற்றின் வேகத்தில் நிகழும் மாற்றங்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலை கொண்டு பெலிகன் பறவைகள் தங்களின் சிறகுகளை பயன்படுத்தாமலேயே நீண்ட நேரம் வானில் மிதக்கின்றன என்றார்.அந்த பறவைகள் டைனமிக் சோரிங் (Dynamic Soaring) என்று அழைக்கப்பட்டது. அந்த பறவைகளின் உத்தியை பயன்படுத்தி எரிபொருளே இல்லாமல் ஒரு விமானத்தை பல நாட்கள் பறக்கவைக்க முடியும் என்பது அவருடைய கருத்து.

 

கிளைடர் ஓட்டிகள் இந்த உத்தியை பயன்படுத்தி அவர்கள் பறக்கும் திறமையை நீட்டிக்கொண்டனர். இந்த உத்தியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஆர்வம் காண்பிக்கப்படவில்லை எனவே இதில் அந்த அளவுக்கு விரைவாக முன்னேற்றம் இல்லாமல் போனது ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு நாசாவை சேர்ந்த ஒரு ஆய்வுக்குழு டைனமிக் சோரிங் உத்தியை பயன்டுத்தி L-23 Bank sail என்ற ஒரு வகை விமானத்தை ஓட்டி நிருபித்துள்ளனர்.

 

பேராசிரியர் ஜோஷிம் கிரெனெஸ்ட் தலமையிலான ஆய்வாளர்கள் இந்த டைனமிக் சோரிங் உத்தியை தொடர்ந்து ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றனர் அதன் விளைவாக 20,000 அடி உயரத்தில் மணிக்கு சுமார் 300 மைல் வேகத்தில் பறக்கக்கூடிய 21 அடி நீள இறகுகளைக் கொண்ட விமானம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் வானிலை நிலவரங்களை பதிவு செய்வது, காட்டு உயிரினங்களை பற்றி தகவல் தெரிவிப்பது மற்றும் தொலைக்காட்சி. செல்போன் சிக்னல்களை தாங்கி செல்லும் தகவல் ஒளிபரப்பு விமானமாகவும் இந்த டைனமிக் சோரிங் (Dynamic Soaring) தொழில் நுட்பத்தில் செய்து காண்பிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் பக்கத்தை (Facebook Page) உங்கள் விருப்ப பக்கமாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் பக்கத்தின் லிங்க் தமிழ் கடல் – முகநூல் பக்கம் இதை click செய்து பக்கத்தின் உள்ளே நுழைந்து LIKE செய்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
தமிழ் கடல்

தமிழ் கடல் முகநூல் குழுமம்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro