ஏகலைவன் சில தகவல்கள்

ஏகலைவன் சில தகவல்கள்மகாபாரத்தில் மிகவும் நல்ல மற்றும் பரிதாபத்திற்குரிய கதாபாத்திரம் எவர் என்றால் அது ஏகலைவன் மற்றும் கர்ணன் என்றும் சொல்லலாம். இந்த பதிவில் ஏகலைவனை பற்றி பார்போம். ஏகலைவன், வேடுவர் குடுத்திலே பிறந்தவன். இவனுக்கு வில் வித்தையை கற்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது அதனால் அவன் துரோணாச்சாரியரிடம் சகல கலைகளையும் பயிற்சி பெற குரு தட்சனை வைத்து அனுமதி கேட்டான். ஆனால் துரோணரோ ஏகலைவன் வேடுவர் குலத்தை சேரந்ததால் வில் வித்தையை கற்று தர மறுத்து விட்டார். சத்திரியர்களுக்கு மட்டுமே வில் வித்தை கற்று தருவேன் என்று கூறிவிட்டார். இதனால் மனம் மகிழ்ச்சிடையாத ஏகலைவன் மனத்தினை தளரவிடாது தனது இருப்பிடமான வனத்திற்குச் சென்றான். துரோணாச்சாரியாரைப் போலவே சிலையொன்றினை செய்தான்.

 

அந்தச் சிலையையே தமது குருவாக எண்ணி நாள் தோறும் வழிபாடு செய்து வித்தையைத் தாமே கற்றுக் கொள்ளத் துவங்கினான்.இதனால் இவனிடம் அமைந்து இருந்த குருபக்தியும் ஆர்வமும் சேர்ந்து மிகவும் திறமையுள்ளவனாகவும், போர்க் கலையில் தேர்ந்த பெருமகனாக இவன் உருவாக்கினான்.இவனிடம் வில் வித்தையின் நுணுக்கங்கள் ஒன்று சேர்ந்து இவனை பெரிய வில்லாளனாக மாற்றியிருந்தது. வில் வித்தையில் இவன் மிகவும் வல்லவனாக மாறி இருந்தான்.
இந்த நேரத்தில் துரோணரிடம் பயிற்சி பெற்று வந்த பாண்டவர்களும் கெளரவர்களும் வேட்டைக்காக வனத்திற்கு வந்தார்கள். துரோணரைப் பொறுத்த வரையில் அவருடைய பயிற்சியாளர்களிலே வில்வித்தையில் சிறந்தவன் எனப் பெயர் பெற்றவன் அர்ச்சுனன் ஆவான். இதனால் தான் வில்லுக்கு விஜயன் என்கிற பெயர் பெற்றான் அர்ச்சுனன். எனவே மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத நுணுக்கமான வித்தைகளை கூட இவனுக்குக் கற்பித்து இருந்தார் துரோணர். வேட்டைக்கு அர்ச்சுனனும் வந்திருந்தான். அவனைத் தவிரவும் வில்வித்தையில் சிறந்தவர் ஒருவர் யாரும் இருக்கக்கூடாது என்பது துரோணருடைய அபிப்பிராயமாக இருந்தது. இவர்கள் வேட்டைக்கு செல்கின்ற போது உடன் நாய்களும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர்.இதிலே ஒரு நாயானது ஏகலைவன் வில் வித்தையை பயிலும் இடத்திற்கு வந்திவிட்டது. தமது ஆற்றலினால் அந்த நாயினை அடக்கி வைத்திருந் தான் ஏகலைவன். அது அவனுடைய வில்லாற்றலினால் அடங்கிப் போய், துரோணரும் ராஜகுமாரர்களும் இருந்த இடத்திற்கு வந்தது.

 

நாய் அவ்வாறு அடக்கி வந்ததைக் கண்ட யாவரும் அதிசயித்துப் போனார்கள். இத்தகு ஆற்றல் உள்ளவன் யாரென்பதினை அறிந்து கொள்ள அவர்கள் வனம் முழுக்கத் தேடி, அத்தகு சிறந்த வீரர் ஏகலைவன் என்பதனை அறிந்து துரோணரிடம் வந்து அவனைப் பற்றிக் கூறினார்கள். துரோணருக்கு அவனைப் பற்றிய செய்தி மிகவும் வியப்பினைத் தந்தது. அவனைக் காண அவரே அவனைத் தேடிச் செல்கின்றார்.

 

துரோணரைக் கண்ட ஏகலைவன் அவரை வணங்கி வரவேற்று உபசரிப்பு செய்தான். நாயின் வாயைக் கட்டக்கூடிய வித்தையை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று துரோணர் அவனிடம் வினாவினார்.எனது குருநாதர்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். யார் உன்னுடைய குரு?

 
நீங்கள் தான் துரோணாச்சாரியாரே……

அர்ச்சுனன் ஒருவனைத் தவிர இந்த வில் வித்தையை நான் யாருக்கும் சொல்லித் தரவில்லையே…. நீ என்னுடைய சீடனும் கிடையாது. என்னிடம் வித்தைகளைப் பயின்றவனும் கிடையாது. அப்படியிருக்க நான் எப்படி உனக்குக் கற்றுக் கொடுத்தேன்,உங்கள் உருவத்தினை செய்து அதனையே தாங்களாக நினைத்து எனது போக்கில் வித்தைகளைக் கற்றுக் கொண்டேன்.

 

அவ்வளவு குருபக்தியா உனக்கு என்னிடம். ஆமாம். உங்களிடம் வில்வித்தை கற்றுக் கொள்ள குருதட்சிணையோடு வந்தேன். ஆனால் நான் வேடுவன் என்பதினால் நீங்கள் கற்றுத் தரவில்லை. எனவே உங்களைப் போன்ற சிலையை செய்து நானே இவற்றினைக் கற்றுக் கொண்டேன்.

 

அப்படியானால் எனது வித்தைகளை கற்ற நீ… எனக்கு குருதட்சிணையாக எதைக் கேட்டாலும் தருவாயா? எப்போது நீங்கள் குரு என்றும் நான் உங்களின் சீடன் என்றும் அங்கீகாரம் அளித்தீர்களோ அப்போது உங்களுக்கு குருதட்சிணையாக எதுவும் தருவதற்கு நான் மிகவும் சித்தமாக உள்ளேன். எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்றான். உனது வலது கை கட்டை விரலை எனக்கு குரு தட்சினையாக தருவாயா? அப்படியே ஆகட்டும் என்று தமது வலது கைகட்டை விரலை அறுத்துக் கொடுத்தான் ஏகலைவன்.

 

இது தகாத செயல்தான், ஆனால் துரோணரைப் பொறுத்த வரையில் இது அவசியமான விஷயமாகும். இதனால் ஏகலைவனிடம் இருந்த தனுர் வேத நுணுக்கங்கள் மறைந்தன. வேடுவனுக்கு இக்கலை தேவையில்லை என்பதினாலேயே துரோணர் இவ்வாறு செய்தார் மேலும் எதிர்காலத்தில் பெரும் போர்கள் நேரிட்டால் அப்போது இவன் நம்க்கு எதரியாக மாறினால் அது பெரும் ஆபத்தை நமக்கு விளைக்கும் என்ற எண்ணத்திலும் துரோணர் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துக் கொண்டார்.

 
இருந்தாலும் ஏகலைவன் மிகவும் புகழ்பெற்றவனாக இதன் பொருட்டு ஆளாகினான்.


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் பக்கத்தை (Facebook Page) உங்கள் விருப்ப பக்கமாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் பக்கத்தின் லிங்க் தமிழ் கடல் – Tamil Blog Site இதை click செய்து பக்கத்தின் உள்ளே நுழைந்து LIKE செய்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
தமிழ் கடல்

தமிழ் கடல் முகநூல் குழுமம்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro