கண்ணனின் பக்தன் சூர்தாஸ் – சிறு கதை

கண்ணனின் பக்தன் சூர்தாஸ் பக்த சூர்தாஸ் ஓர் அந்தணர் அவர் கண்ணனிடம் அளவு கடந்த பக்தி கொண்டவர். அவருக்கு அருள் புரிய கண்ணன் அவர்முன் காட்சியளித்து அவருக்கு தன்னைப் பார்க்கும் சக்தியைக் கொடுத்தார். கண்திறந்து ஆசைதீர கண்ணனைப் பார்த்து மகிழ்ந்தார் சூர்தாஸ்.

 

உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? கேளுங்கள் நான் அளிக்கிறேன் என்றான் கண்ணன். சுவாமி உங்களைத் தரிசனம் செய்தாகிவிட்டது. இனி எனக்கு வேறு என்ன வேண்டும்? இந்த திவ்ய சொரூபத்தை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு நான் என் வாழ்நாளைக் கடத்திவிடுவேன். தங்களைத் தரிசித்த கண்களால் நான் வேறு யாரையும் பார்க்க விரும்பவில்லை. அதனால் என்னை மீண்டும் குருடனாக்கி விடுங்கள். அதுவே நான் வேண்டும் வரம் என்றார்.

 

சூர்தாஸின் வேண்டுகோளின்படி மீண்டும் அவரைக் குருடனாக்கிவிட்டு கண்ணன் மறைந்தார். சூர்தாஸ் கண்ணன் வாழும் பிருந்தாவனத்திற்குப் போய்வர விரும்பினார். யாருடைய துணையுமின்றி தானே நடந்து செல்லத் தொடங்கினார். இதை உணர்ந்து கொண்டார் கண்ணன். அவருக்குத் தெரியாமல் அவரைப் பின்தொடர்ந்து வந்தார்.

 

சூர்தாஸ் ஒரு பெரிய பள்ளத்தின் ஓரத்திற்கு வந்துவிட்டார். அடுத்த அடியை எடுத்து வைத்தால் அவர் பள்ளத்தில் விழுந்து விடுவார். பெரியவரே நில்லுங்கள்! மேலே செல்ல வேண்டாம் என்று குரல் கொடுத்தார் கண்ணன் ஏனப்பா? நான் பிருந்தாவனத்திற்கு போகவேண்டுமே என்று சொன்னார் சூர்தாஸ்.

 

ஐயோ, அடுத்த அடியை எடுத்து வைத்தால் நீங்கள் பெரும் பள்ளத்தில் விழுந்து விடுவீர்கள். அதற்காகத் தான் தடுத்தேன் என்றான் கண்ணன், எனக்கு எப்போதும் கண்ணன் துணையிருக்கிறான். எனக்கு எந்தவித ஆபத்தும் நேராது. ஆயினும் நீ சொன்னபடி கேட்கிறேன் நீ யார்? நான் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டார் சூர்தாஸ். என் பெயர் கோபாலன். நான் இங்கே மாடுகளை மேய்க்கின்றவன் என்றார் கண்ணன்.

 

கண்ணனின் இனிய குரல் சூர்தாஸூக்கு புரிந்துவிட்டது. எவ்வாறாயினும் கண்ணனைத் தன் பிடியில் சிக்கவைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார் இறைவனை சிக்கென பிடிப்பதல்லவா பக்தர்களின் நோக்கம். கண்ணனும் இதைப் புரிந்துகொண்டான்.

அப்பனே நீ என்னுடன் பிருந்தாவனம் வரை துணை வருவாயா? என்று கேட்டார் சூர்தாஸ். அது எப்படி முடியும் என்னுடைய மாடுகளை யார் பார்த்துக் கொள்வது வேண்டுமானால் பிருந்தாவனச்சாலை வரை உங்களைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருகிறேன் என்றார் கண்ணன். சூர்தாஸ் ஒப்புக்கொண்டார்.

 

இந்தக் குச்சியின் மறுமுனையை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சாமர்த்தியமாகப் பேசினார் கண்ணன். ஆனால் சூர்தாஸ், நான் தள்ளாடி நடப்பவன் உனது கையைக் கொடுத்து உதவக்கூடாதா என்று தந்திரமாகக் கேட்டார். சுவாமி அது முடியாது. மாடுகள் திசை திரும்பிச் சென்றால் உடனே விட்டுவிட்டு ஓடிச் சென்றுவர நான் தயாராக இருக்க வேண்டும். குச்சியை வேண்டுமானால் பிடித்துக் கொள்ளுங்கள் என்றார் கண்ணன். வேறுவழியின்றி ஒப்புக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார் சூர்தாஸ்.

 

கண்ணனை எப்படியாவது பிடித்து விடவேண்டும் என்ற சிந்தனையுடனேயே கண்ணனின் திருநாமத்தைச் சொல்லி இனிமையாக பஜனை செய்துகொண்டு வந்தார். அதில் மகிழ்ந்து மெய்மறந்து போனார் கண்ணன். சூர்தாஸ் மெல்ல மெல்ல தடவித் தடவி கண்ணனின் கையை இறுகப் பிடித்துக்கொண்டார். கண்ணன் திடுக்கிட்டுப் போனான், என்னை விட்டுவிடுங்கள் என்று கூவினான்.

 

கண்ண பெருமானே! எப்படி நீங்கள் விடுவித்துக் கொண்டு போக முடியும்? நான் உங்கள் கையை வேண்டுமானாலும் விட்டு விடலாம். ஆனால் என்றோ நான் உங்களை என் இதயத்தில் சிறை வைத்துவிட்டேனே! என்றார் சூர்தாஸ். கண்ணன் சூர்தாஸை மகிழ்ச்சியோடு கட்டி அணைத்துக் கொண்டார்.


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் பக்கத்தை (Facebook Page) உங்கள் விருப்ப பக்கமாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் பக்கத்தின் லிங்க் தமிழ் கடல் – Tamil Blog Site இதை click செய்து பக்கத்தின் உள்ளே நுழைந்து LIKE செய்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
தமிழ் கடல்

தமிழ் கடல் முகநூல் குழுமம்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro