கரண்டி அல்வா

தேவையானவை – மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – 2 கப், வறுத்த முந்திரி –ஒன்றரை கப், நெய் – 2 கப், எண்ணெய் – 4 கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் –தேவையான அளவு.

செய்முறை – மைதாமாவில் தண்ணீர் விட்டு, கெட்டியாகக் கரைத்து, இரண்டு நாட்கள் புளிக்க வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில், தண்ணீரைக் கொதிக்க வைத்து சர்க்கரைப் போட்டு, பாகு பதம் வரும் வரை காய்ச்சவும். அதில், மைதா கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். அல்வா பதம் வந்ததும்… ஏலக்காய்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா இறுக்கமானவுடன், எண்ணெய், நெய் விட்டு மீண்டும் இளகும் வரை கிளறவும். கடைகியாக, வறுத்த முந்திரியைப் போட்டு இறக்கினால்… கரண்டி அல்வா ரெடி.

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro