கிடாரங்காய் சாதம் செய்முறை

தேவையானவை
பச்சரிசி – 200 கிராம்
கிடாரங்காய் – பாதி அளவு
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
 

செய்முறை
பச்சரிசியை உதிரி உதிரியாக வடித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு ஆற வைக்கவும். கிடாரங்காயை சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அடுப்பை அணைத்துவிட்டு, அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையை சாதத்தில் சேர்த்து, கிடாரங்காய் சாறையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் பக்கத்தை (Facebook Page) உங்கள் விருப்ப பக்கமாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் பக்கத்தின் லிங்க் தமிழ் கடல் – முகநூல் பக்கம் இதை click செய்து பக்கத்தின் உள்ளே நுழைந்து LIKE செய்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
தமிழ் கடல்

தமிழ் கடல் முகநூல் குழுமம்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro