கோரக்கரின் பிறப்பு

ஸ்ரீ கோரக்கரின் பிறப்பை இருவிதமாக பேசப்படுகிறது ஒரு கதை நம்ப முடியாத விசித்திர கதையாகும் மற்றொன்று நம்பக்கூடிய கதையாக உள்ளது.முதல் வகை கதையை பார்ப்போம் பதினென் சித்தர்களின் ஒருவரான மச்சேந்திர நாதர் ஒருசமயம் வடக்கு பொய்கை நல்லுரில் ஒரு வீட்டில் பிச்சை எடுக்கும்போது அவ்வீட்டு பெண் அவருக்கு பிச்சை இட்டு தனக்கு குழந்தை இல்லாத குறையை கூறி தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று மச்சேந்திர நாதரிடம் வேண்டிநால்.
மச்சேந்திரர் உடனே அவர் வைத்திருந்த குருமருந்தை விபூதியாக அந்த பெண்னிடம் கொடுத்து அதை சாப்பிட்டால் உனக்கு பிள்ளை பாக்கியம் கிட்டும் என்று சொல்லி சென்றுவிட்டார். இந்த விஷயத்தை அந்த பெண் தன் பக்கத்து வீட்டு பெண்னிடம் சொல்ல அவளோ சாமியார்கள் கொடுத்த விபுதியை சாப்பிடாதே அதில் உணக்கு வசியம் வைத்திருக்கலாம் அது உன்னை மயக்கிவிடும் அபாயம் உண்டு என்று எச்சரித்து சென்றுவிட்டாள் இவளோ பயந்து அந்த விபூதியை எறியும் அடுப்பில் கொட்டி விட்டாள்.

 

பண்ணிரெண்டு ஆண்டுகள் கழித்து மச்சேந்திர சித்தர் மீண்டும் அவ்வூருக்கு திரும்பி அதே வீட்டில் பிச்சைக் கேட்டு நிற்கிறார். பிச்சையிட வெளிவந்த பெண்ணை பார்த்து என்னை அடையாளம் தெரிகிறதா எங்கே உன் பிள்ளை நான் பார்க்க வேணடும் என்று கூற, அந்த பெண் சித்தரின் காலில் கோரக்கர்விழுந்து என்னை மன்னித்துவிடுங்கள் நீங்கள் அளித்த விபூதியை சாப்பிடாமல் அதை அடுப்பில் எரிந்துவிட்டேன் என்று நடந்ததை கூறி, எனக்கு இன்று வரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்று அழுது நின்றாள். மச்சேந்திரர். அப்பெண்னிடம் அடுப்பில் எரிந்த விபூதியின் சாம்பலை எங்கே போட்டாய் என்று கேட்டார் அவள் கோரைபுற்கள் நிறைந்த ஒரு குப்பைமேட்டை காண்பித்தாள் உடனே மச்சேந்திரர் குப்பைமேட்டை நோக்கி கோர்க்கா என்று கூவி அழைத்தார், உடனே அக்குப்பை மேட்டிலிருந்து 12 வயது பாலகனாக ஒரு குழந்தை வெளிவந்தது. அக்குழந்தையை கட்டி அனைத்து ஆசிர்வதித்து அப்பெண்னிடம் கொடுத்தார். இதுவே கோரக்கரின் அவதார வரலாறு என்று சொல்கின்றனர்.

இதை நம்புவது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் சித்தர்கள் அற்புதங்கள் பல செய்யக் கூடியவர்கள், நம் அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய வல்லமை பெற்றவர்கள் என்று நினைக்கும்போது நம்பவும் செய்யலாம். கோரக்கரின் மற்றோரு பிற்ப்புக்கான வரலாறு உள்ளது அதை அடுத்த பதிவில் பார்போம்.

 

நன்றி … வாழ்க வளமுடன்

 


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் குழுமத்தில் (Facebook Group) இனையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் பயனுள்ள தகவல்களை பதியலாம்.

குழுமத்தின் பெயர் தமிழ் கடல்
குழுமத்தின் லிங்க் https://www.facebook.com/groups/264740130252643/ இதை click செய்து தமிழ் கடல் குழுமத்தின் உள்ளே நுழைந்து இனையவும்.

நன்றி.
தமிழ் கடல்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro