கோரக்கரின் பிறப்பு தொடர்ச்சி

இல்லறத்திலேயே துரவரம் கண்ட மச்சேந்திருக்கு மகனாக பிறந்தவர் கோரக்கர். இந்த அருட்குழந்தையை கருவில் தாங்கி பெற்றெடுத்த தாய் பிரசவத்தின்போது நோய்யுற்று இறந்துபோனார். பச்சிளம் பிள்ளையாகிய கோரக்கரை எடுத்துக்கொண்டு வடக்கு பொய்கை நல்லூரை அடைந்தார் மச்சேந்திரர். அங்கு வாழ்ந்து வந்த குழந்தை பேறில்லாத தம்பதியர்களிடம் கோரக்கரை ஒப்படைத்து வளர்க்க சொன்னார். அந்த தம்பதியர்களும் குழந்தையை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டார்கள்.

மச்சேந்திரர் அவர்களிடம் இவன் இந்த உலகு மாந்தர்களுக்கு கர்ம வினைகளால் வரும் கோரமான நோய்களையும், மனம் நொந்து வாழும் மக்களின் துயரத்தை அகற்ற பிறந்தவன் ஆதலால், கோரக்கர் என்று பெயர் வைத்து வளர்த்து வாருங்கள் என்று கூறினார். நான் பண்ணிரண்டு ஆண்டுகள் தவம் முடித்து திரும்பும் போது என் மகனை என்னிடம் ஒப்படைக்க வேண்டுமாறு கூறி அவ்வூரை விட்டு கிளம்பினார் மச்சேந்திர சித்தர்.

korakkar siddharகோரக்கர் அத்தம்பதியனரின் செல்லப்பிள்ளையாக மிகவும் சிறப்புடன் வளர்ந்து வந்தார். இயற்கையாகவே இறை பக்தி நிறைந்த அத்தம்பதியினர்களின் வளர்ப்பினால் கோரக்கரும் இறை பக்தி மிகுந்து அன்னை பராசக்தியின் பேரில் அளவிட முடியாத பக்தியுடன் திகழ்ந்தார் கோரக்கர். பால பருவத்திலேயே கல்வியில் தலைசிறந்து விளங்கினார்.
அச்சமயங்களில் அங்கு மகரிஷி சித்தர் காகபுஜண்டர் தங்கி தவம் செய்து கொணடிருந்தார். அதனாலேயே வடக்கு பொய்கை நல்லூரில் இருந்த காடு காகபுஜண்டர் வனம் என பெயர் பெற்று விளங்குகிறது. அவரை தரிசிக்க பல சித்தர்களும் சிவனடியார்களும் வந்த வண்ணம் இருந்தனர். கோரக்கர் சிறுவயதிலேயே சித்தர்கல்பால் ஈர்ப்பு பெற்று அவர்களை சந்தித்து ஆசி பெற்று வந்தார். அவர்களுக்கு தேவையான தொண்டுகளை குறைவின்றி செய்து வந்தார். இப்படி சிறு வயதிலேயே உண்மையான பக்தியுடன் கோரக்கர் விளங்கியதால் அவருக்கு தானாகவே யோகமும் ஞானமும் வாய்த்தது. இப்படியும் கோரக்கரை பற்றிய பிறப்புக் கதை உள்ளது.

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்குருக்கள் ஆனதும் வேணபூசை சொல்வதும்
சற்குருக்கள் ஆன்தும் சாத்திரங்கள் சொல்லவதும்
செய்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே – சிவ்வாக்கியர்

சிவவாக்கியர் இந்த பாடலில், இம்மண்ணில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் ஒரு தாயின் சுழலில் இருந்து உருவாகி வெளிவருகின்றனர் என்றும் அவ்வாறு மனித பிறப்பெடுத்தவர்களில் மகான்களும், சித்தர்களும் தெய்வ அவதாரங்களும் அடங்கும் என்பதாகும்.

மேலும் கோரக்க சித்தரே அவர் இயற்றிய சந்திரரேகை நூலில் 110வாது பாடலில்

பாரறியப் பதினென்பேர் சித்தரெல்லாம் பக்குவமாய் மாதர் பத்துமாதக் கெர்ப்பம்.

இவ்வரியின் பொருள் அனைத்து சித்தர்களும் தாயின் கர்பத்தில் இருந்தே வந்தார்கள் என்று கூறுகிறார் எனவே கோரக்கரும் ஒரு தாயின் கர்பத்திலிருந்தே அவதரித்திருக்க வேண்டும் என்று நாம் அறியவேண்டும்.

 


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் குழுமத்தில் (Facebook Group) இனையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் பயனுள்ள தகவல்களை பதியலாம்.

குழுமத்தின் பெயர் தமிழ் கடல்
குழுமத்தின் லிங்க் https://www.facebook.com/groups/264740130252643/ இதை click செய்து தமிழ் கடல் குழுமத்தின் உள்ளே நுழைந்து இனையவும்.

நன்றி.
தமிழ் கடல்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro