சந்திர யோகம் – திங்களொளி பெருதல் – திருமூலர்

திருமூலர் திருமந்திரம்வானத்திலுள்ள திங்களின் கலைச் சுடர்களை தவம் செய்பவர்கள் தனது ஆற்றலால் உடம்பில் வாங்கிக் கொள்ளுதலே சந்திர யோகமாகும். இதனால் சாதகனின் நுண்ணுடம்பும் பருவுடம்பும் தூய்மையடைந்து அனைத்திலும் வெற்றி வாய்க்கும்.

எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்தும் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துக் தூலத்த காயமே – திருமந்திரம் 851

பெறுகின்ற திங்களின் சுடர்க்கலையானது பருவுடலிலிருந்து சூக்கும தேகத்திற்கு ஏறியும் சூக்கும தேகத்திலிருந்து பருவுடலுக்கு இறங்கியும் இயங்கும். இந்த நிலையானது வளர்பிறை தேய்பிறை போன்று ஒரு குறிப்பிட்ட நாட்களில் வளர்வதும் ஒரு குறிப்பிட்ட நாட்களில் தேய்வதும் போல் அமைகின்றது. இத்தகைய திங்களின் கலையினால் சூக்கும உடம்பும் பருவுடம்பும் தூய்மையடைவதால் உயிர் தூய்மையாகும்.
 

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டு. ஆறிரண்டு ஈரைந்துள்
ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி
ஆகின்றி யோகி அறிந்த அறிவே. – திருமந்திரம் 852

உடம்பகத்தில் விளங்குகின்ற திங்கள் , ஞாயிறு, தீ என்ற மூன்று சுடருக்கும் முறையே பதினாறு கலைகள், பன்னிரண்டு கலைகள்,பத்துக்கலைகள் என்று கூறப் பெறும்,இயங்கும் அக்கலைகளெல்லாம் நடுநாடிவழியே ( சுழுமுனையில்) இயங்கச் செய்யும் ஆற்றலை தவத்தோன் அறிந்த அறிவாகும்.


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் பக்கத்தை (Facebook Page) உங்கள் விருப்ப பக்கமாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் பக்கத்தின் லிங்க் தமிழ் கடல் – Tamil Blog Site இதை click செய்து பக்கத்தின் உள்ளே நுழைந்து LIKE செய்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
தமிழ் கடல்

தமிழ் கடல் முகநூல் குழுமம்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro