சித்தர்கள் ஓர் அதிசயம்

அனைத்து நண்பர்களுக்கும் என்னுடய கனிவான வணக்கம். நம்முடைய பாரத நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தி அவற்றை நூல்களாக வழங்கியுள்ளனர். சில நூல்கள் வழியாகவும், இணைய தளத்தின் வழியாகவும் நான் அறிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதை அறிந்தவர்கள் என் பதிவில் பிழைகள் கன்டால், திருத்துமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

 சித்தர்கள் அக்ஷ்ட்டமா சித்துக்களில் கைதேர்ந்தவர்கள் (அக்ஷ்ட்டமா சித்துக்களை பற்றி பிற பதிவுகளில் பார்போம்) சித்தர்கள் மருத்துவதுறைகளிலும் கை தேர்ந்தவர்கள். மிகசுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சித்தர்கலளே உலகின் முதல் விந்ஞானிகளாவர். சித்தர்களின் வேதியல் முறைகளே பல இரசாயன தொழில்நுட்பங்களுக்கு அடிப்படையானவையாகும்.

 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் இவைகளை கண்டறிந்துள்ளனர்.

ஒரு மனிதன் இயற்கையான நெறிகளுடன் வாழ்ந்து வந்தால் மனிதனுடய ஆயுட்காலம் 120 ஆண்டுகளாம்.மனிதன் நாள் ஒன்றுக்கு 21600 முறை சுவாசிக்கின்றான் என்று கன்டறிந்துள்ளனர். ஒருவன் தன் சுவாசத்தை கட்டுபடுத்துவதன் முலம் அவனுடய ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம் என்று கன்டறிந்தனர் எனவே,

தியானத்தின் மூலம் தன் மூச்சை கட்டுபடுத்தி பல ஆண்டு காலம் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். இரசவாதங்கள் மற்றும் காயகல்ப முறைகளிலும் பல ஆண்டுகாலம் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர் வாழ்ந்தும் வருகின்றனர்.

வர்மகலையின் சொந்தகாரர்கள் நம்முடய சித்தர்களே, அகத்தியர் அவருடய நூல்களில் விளக்கியுள்ளார். வர்மகலை சண்டை பயிற்சி கலைக்காக தோற்றிவிக்கபட்டதல்ல அது ஒரு சிறந்த மருத்துவ கலையாகும். காலபோக்கில் தற்காப்பிற்காக அது பயன்படுத்தபட்டது.

பல சித்தர்கள் உருவ வழிபாடுகளை எதிர்க்கின்றனர் உதாரணமாக சிவ்வாக்கியர் என்ற சித்தர் இந்த பாடலில் கூறுகிறார்.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுக்ஷ்பந் சாத்தியே

சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியிமோ

சுவை மிகுந்த உணவு பதார்த்தங்கள் சமைத்த சட்டியானது அந்த உணவின் ருசியை உணராது அதுபோலவே மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வமென்று பெயரிட்டு பூக்களாலும் மொண மொண என்ற மந்திரங்களாலும் வழிபடுவதால் என்ன பயன் என்று நம் கன்னதில் அறையுமாறு சொல்கிறார்.

 தொடர்ந்து நான் அறிந்தவற்றை உங்களிடம் சமர்பிக்கிறேன்.

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro