தக்காளி ஜாம் செய்வது எப்படி?

தக்காளி ஜாம் செய்வது எப்படி?வாய் அகன்ற சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் தேவையான அளவு சுத்தம் செய்யப்பட்ட தக்காளிகளைப் போட்டு, நீரை அடுப்பிலிட்டு வேக வைக்க வேண்டும்.நன்கு வெந்த பழங்களைத் தண்ணீரல் போட்டு, அதன் மேல் தோலை உரித்து எடுக்க வேண்டும்.உரித்தெடுத்த தக்காளிகளை கையால் பிசைந்து வைக்க வேண்டும். தக்காளிப் பழ அளவை விட இரு மடங்கு சர்க்கரையை பாத்திரத்தில் கொட்டி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும்.சர்க்கரைப் பாகு பதமாக வந்ததும், உரித்து, மசித்து வைத்திருக்கும் தக்காளிப்பழ மசியலை பாகில் கொட்டி நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும்.

 

சர்க்கரையும், தக்காளியும் ஒன்று சேர்ந்து நன்கு கலந்து ஜாமாக மாறிவிடும்.அந்த ஜாமை சுத்தமான பாத்திரங்கள் (அ) பாட்டில்களில் கொட்டி இறுக மூடி வைத்து, தேவையானபோது, தேவையான அளவு எடுத்து வைத்துக் கொண்டு, உணவில் பயன்படுத்த வேண்டும்.சர்க்கரை நோய் இல்லாதவர்கள் பயன்படுத்த அருமையான துணைப் பொருள் ஆகும். தக்காளியை அன்றாடம் சேர்த்து உண்டு வருவது நல்ல பலனைத் தரும்.


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் பக்கத்தை (Facebook Page) உங்கள் விருப்ப பக்கமாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் பக்கத்தின் லிங்க் தமிழ் கடல் – முகநூல் பக்கம் இதை click செய்து பக்கத்தின் உள்ளே நுழைந்து LIKE செய்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
தமிழ் கடல்

தமிழ் கடல் முகநூல் குழுமம்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro