தேங்காய் சாதம்

தேவையானவை – வடித்த சாதம் 2 கப், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, முந்திரிப்பருப்பு – 10, நெய் – 2 டேபில்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 கப், காய்ந்த மிளகாய் – 2, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை – சாதத்தை உதிர் உதிராக வடித்து வைத்துக் கொள்ளவும், கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து சிவக்க மொறுமொறுவென வறுக்கவும். அதில் வடித்த சாதத்தில் உப்பு, தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து, சாதம் உடையாமல் கிளறினால்…. தேங்காய் சாதம் ரெடி.

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro