பிரண்டை ரசம் – யாகோபு சித்தர்

நாருநீ பிரண்டை பிடி சட்டியிட்டு
நல்லுள்ளி அதிநேரே பாணியிட்டு
பாருநீ சட்டியிலே போட்டவித்துப்
பதிவாக அதைக்கடைந்து வைத்துக்கொண்டு
மோருஒரு படிவார்த்து கலக்கிக்கொண்டு
உத்தமமாய் மிளகாயும் மிளகு உப்பும்
சீருடனே புளியிட்டு கரைத்துப்போடு
செயமாக பிரண்டைரசம் உண்ணக்கேளே

ஒரு பிடி பிரண்டை எடுத்து சட்டியில் எடுத்துக்கொண்டு நன்கு அவிக்க (அல்லது) வதக்க வேண்டுமாம். அதற்கு சம அளவு வெள்ளைப்பூண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கடைந்து கொள்ள வேண்டும். ஒரு படி மோரை தயார் செய்து அதனுடன் உப்பு, மிளகாய், புளி கரைத்து பிரண்டை ரசம் செய்யவேண்டும் என்கிறார்.

உண்டிடவே திரிநேரம் வாந்திவாய்வு
உண்மைசெரி யாமாந்தம் பேதியெல்லாம்
கண்டவுடன் தெண்டனிடு மூலவாய்வு
கனலெழும்பி அப்புரந்தான் காணாதோடும்
முண்டுசெய்யும் பசியுண்டாம் வாய்வுநீங்கும்
மூலமுளையுஞ் சுருங்கும் முளையுமில்லை
பண்டுசெய்த பெரியோர்கள் சொன்னநீதி
பாருலகில் யாகோபு பலன்சொன்னாரே — யாகோபு (இராமதேவர்)

பிரண்டை ரசம் உட்கொள்வதன் மூலம் வாந்தி, பேதி, மூலவாய்வு, மூலச் சூடு எல்லாம் ஓடிவிடும் என்கிறார்.

பிரண்டை ஒரு கொடி வகை தாவரம் வயல்வெளிகள் மற்றும் சாலையோரங்களில் வளர்ந்து கிடக்கும்.
இங்கே பிரண்டையின் புகைப்படம். புகைப்படத்தை பெரிது செய்ய அதன் மேலே கிளிக் செய்யவும்.

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro