போலி சாமியார்கள் – கோரக்கர்

துறவு புக்கித் துரிதமுடன் தூது வைத்துத்
தோகையரைப் புல்லுதற்காய்த் தூளி தங்கள்
பரப்பியந்திர மேலிட்டுத் தபசியைப் போல்
பாசாங்கு செய்து பக்கம் பார்த்து நின்று
புறங்காட்டி பூவையரைப் புல்வோர் பேயர்
பூரணத்தி ணியல்பென்ன வென்று கேட்டால்
மறம் பூண்டு வாயில் வந்த படியாய்ப் பேசி
மாந்தர்களை மயங்கிடுவர் முத்திக்கே காரே — கோரக்கர் சந்திரரேகை 200

துறவியப்போல் வேடம் இட்டு காம இச்சைக் கொண்டு அலைவார்களாம். யந்திர தகடுகளை பரப்பி மேலிட்டு தபசியை போல் பாசாங்கு செய்வார்களாம். எப்போதும் பெண்கள் பக்கம் பார்த்து பெண்னாசை பிடித்து அலைவார்களாம்,அவர்களை பேயர்கள் என்கிறார். பூரணம் என்றால் என்ன என்று  கேட்டால் வாயில் வந்தபடியெல்லாம் பேசி மக்களை ஏமாற்றி மயக்கிடுவார்களாம்.

இவ்வாறு கோரக்கர் பல்லாயிரம் அண்டுகளுக்கு முன்னரே போலி சாமியார்களை பற்றி கூறிவிட்டார்.

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro