வள்ளலாரின் அகவல் 36 லிருந்து 38 வரை

வள்ளலாரின் அகவல் 36 லிருந்து 38 வரைசாக்கிரஅதீதத் தனி வெளியாய் நிறைவு
ஆக்கிய சிற்சபை அருட்பெருஞ்ஜோதி – அகவல் 36
நனவு கடந்து அனுபவிக்கிற அனுபவமே ஒப்பற்ற இன்பமாகும். இதை உருவாக்குவது திருச்சிற்றம்பலம். அங்கு விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. சாக்கிரம் = நனவு.

சுட்டுதற்கு அரிதாம் சுகஅதீத வெளியெனும்
அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி – அகவல் 37
துரியாதீத இன்பத்தையும் கடந்து விளங்குவது தெயவத் தன்மை. தெய்வத்தன்மை அடைவதற்கு உடலில் எட்டு பகுதிகளையும் கடந்து விளங்கும் சிற்சபையே இன்றியமையாதது. இங்கு விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

அட்டம் = அட்டகம், எட்டு. சுட்டுதற்கு அரிதாம் = சுட்டி அறிய முடியாத. அருளுவது ஆண்டவரா ? பொற்கோயிலா?. ஆண்டவர் வண்ணமாக இருக்கும் பொற்கோயில் தான் வழங்குகிறது. இதைப்போலவே மனமும் , உடம்பும் உயிர் வண்ணமாக மாறுகிற போது நித்தியமாக விளங்க முடியும்.

அட்டகம் என்பது நிலம் , நீர், தீ , வளி,விசும்பு என்ற ஐந்தோடு உயிர், இயற்கை,இறை என்ற மூன்றும் சேர்ந்தே உடலை உருவாக்குவதுதான். அனுபவம் ஐந்து என்பது நனவு, கனவு, துயில், தூரியம்,துரியாதீதம் என்பன. இந்த ஐந்து அனுபவங்களை கடந்தது தெய்வத் தன்மை,இதையே வள்ளலார் மகா காரண உடம்பு என்பர். இதிலிருந்து மேலே இறைவன் அருளால் செல்லும் போது ஏழாவது மாடியாகிய மூல காரண உடம்பை அடைகிறோம். அங்குதான் அருட்பெருஞ்ஜோதியும் உயிரும் பிரிக்க முடியாத நித்திய நிலையை அனகமாக அடைந்து விளங்குகிறது. இதவே பெரு வாழ்வாகும். உடம்பை ஏழடுக்கு மாளிகை என்றும்,எண் சாண் உடம்பு என்றும் சொல்வதுண்டு.

 

நவந்தவிர் நிலைகளும் நண்ணுமோர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி – அகவல் 38
இருப்த்தைந்து அனுபவங்களில் முதல் ஒன்பது அனுபவங்கள் நிலையற்றவை. 16 அனுபவங்களே நித்திய வாழ்வைதருவன, எனவே துன்பம் தருகிற 9 அனுபவங்களை நீக்கும் திருச்சிற்றம்பல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
நவம் = ஒன்பது, அவம் = துன்பம்.
ஜீவ அனுபவம் 5,பர அனுபவம் 5, நின்மல அனுபவம் 5, குரு அனுபவம் 5, சிவ அனுபவம் 5 ஆக அனுபவங்கள் 25.


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் பக்கத்தை (Facebook Page) உங்கள் விருப்ப பக்கமாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் பக்கத்தின் லிங்க் தமிழ் கடல் – முகநூல் பக்கம் இதை click செய்து பக்கத்தின் உள்ளே நுழைந்து LIKE செய்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
தமிழ் கடல்

தமிழ் கடல் முகநூல் குழுமம்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro