வள்ளலாரின் அகவல் 39 லிருந்து 41 வரை

வள்ளலாரின் அகவல்உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய
அபய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி – அகவல் 39
ஒன்றுக்கொன்று முரணாண இன்பம்,துன்பம் இரண்டையும் ஒன்றாக விளங்கும்படி காட்டி அருளுவதும்,அடைக்கலம் தருவதும் திருச்சிற்றம்பலமே. அங்கு விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
உபயம் = இரண்டு , அபயம் = பயம் நீக்கும் அடைக்கலம். துன்பம் கூட பிற உயிர்களுக்கு இன்பம் தருகிறது. மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம, மாயை நீங்க இருவினை ஒப்பு உருவாகிறது. இதனால் உடலில் ஊறும் அமுதமே நித்திய வாழ்வை தருகிறது. இதுவே சத்நித பாதம்.

 

சேகரமாம் பல சித்தி நிலைக்கெல்லாம்
ஆகரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி – அகவல் 40
பல வகையான சித்திகளையும் சேர்த்து வைக்கின்ற களஞ்சியம் போன்றது திருச்சிற்றம்பலமாகும். அங்கு விளங்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
சேகரம் = சேர்த்துவைத்தல் , ஆகரம் = களஞ்சியம்.
பெருவாழ்வு ஒன்றே தனித்த பெருஞ் சித்தியாகிய ஏக சிற் சித்தியாகும். அதிலிருந்து தோன்றுவதே கோடிக்கணக்கான கரும சித்தி, யோக சித்தி, ஞான சித்தி போன்றவைகளாகும்.
சித்தியை எப்படி சேர்ப்பது ? அரிய செயல்களை செய்யும் போது உண்டாகிற அனுபவம் திருச்சிற்றம்பலத்தில் பதிந்து நிலைப் பெற்று விடுகிறது. எனவே இங்கு சித்திகளை அனுபவ வடிவத்தில் பதிவுகளாக சேர்த்து வைக்க முயல வேண்டும். ஞானயோகத்தில் அவற்றை தூய்மை படுத்தவும் முடியும்.

 

மணாதிகட் கரிய மத-அதீத வெளியாம்
அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி – அகவல் 41
சமய மதங்களை எல்லாம் கடந்து அதீத சுத்தசத்திய அனுபவம். அது பண்படாத மனத்திற்கு எட்டாது. அது பதியுமிடம் முதலும் முடிவும் இல்லாத திருச்சிற்றம்பலமேயாகும். அங்கு விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
மன ஆதி என்பது மனம்,பத்தி ,சித்தம்,அகங்காரம் என்கிற நான்கையும் குறிக்கும்.


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் பக்கத்தை (Facebook Page) உங்கள் விருப்ப பக்கமாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் பக்கத்தின் லிங்க் தமிழ் கடல் – முகநூல் பக்கம் இதை click செய்து பக்கத்தின் உள்ளே நுழைந்து LIKE செய்து புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
தமிழ் கடல்

தமிழ் கடல் முகநூல் குழுமம்

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro