வள்ளலார் வாழ்க்கை இறுதி பகுதி

1870 – 1874 ல் பெருமானார் சித்திவளாகத்தில் வாழ்ந்து வந்தார் என்று பார்த்தோம். வள்ளல்பெருமானே இந்த இடத்திற்கு சித்திவளாகம் என்று பெயரிட்டார். சித்தி தரும் இடம் என்று இதன் பொருள். சித்திடையும் வரை இங்கேயே வாழத்தொடங்கினார்.

இறைவனை ஒளி வடிவில் கண்ட பெருமான் வடலூரில் சத்திய ஞான சபையை அமைத்தார். 1871 ஆம் ஆண்டு சபையை கட்ட ஆரம்பித்தனர். 25.1.1872, தை மாதம் 13 வியாழக்கிழமை பூச நாளில் முதன் முதலாகச் சபையில் வழிபாடு தொடங்கப்பட்டது. அனைவரும் அருட்பெருஞ்சோதி தரிசனத்தை கண்டு களித்தனர்.

வள்ளல் பெருமானார் சத்திய ஞானசபயை இயற்கை விளக்கம் என்பார்.

நம்மிடமுள்ள ஆன்ம ஒளியை ஏழு படலம் மறைத்துள்ளது. இந்த ஏழு படலங்களை தாண்டிவிட்டால். நம் ஆன்ம ஒளியை காணலாம் என்கிறார் பெருமான்.

Vadalur Sathya Gnana Sabai.

வடலூர் சத்திய ஞானசபை

இந்த அனுபவத்தை அகத்தே கண்ட வள்ளல் பெருமான், புறத்தே இந்த அனுபவத்தை மக்களுக்கு ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனமாக காட்டுவதே சத்திய ஞானசபையாகும்.

வள்ளல் பெருமான் முடிவு சாகாதிருப்பதே. சாகா தவனே சன்மார்கி வள்ளல் பெருமானின் உபதேசம். “என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே”, சுத்த தேகம்,பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் மூவகை தேக சித்தியையும் பெற்றவர். இதுவே நித்திய தேகம். நித்திய தேகத்தை பெற்றவர்களுக்கு இறப்பில்லை அவர்களே சன்மார்கி. இந்த தேகம் மண்னில் வீழாது இதுவே அவர்களின் இறுதி தேகம்.

நித்திய தேகத்தை பெற்ற வள்ளல் பெருமான் ஸ்ரீ முக ஆண்டு தைதிங்கள் 19 ஆம் நாள் 30 1. 1874 வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு சித்திவளாகத் திருமாளிகையில் தமது திருவறையில் அருட்பெரும்சோதியுடன் இரண்டறக் கலந்தார்.

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro