கீழாநெல்லி – மருத்துவ குணங்கள்

 கீழாநெல்லி ஒரு அற்புதமான மூலிகை தாவரம் இது பல நோய்களை தீர்க்ககூடிய வல்லமை படைத்தது. இது ஒரு சிறு தாவர வகையை சேர்ந்தது.

இது தமிழகம்மெங்கும் காணப்படும். இது சாலையோரங்களிலும் வெலியோரங்களிலும் தோட்டங்களிலும் வளரக்கூடிய தாவரம்

கீழாநெல்லியினால் தயாரித்த தையலம் கை,கால் எரிச்சல் , கண்களின் உஷ்ணத்தன்மை, தலைசுற்றல் மய்க்கம், பித்தக் கிறுகிறுப்பு, அதிக போகத்தினால் உண்டான அசதி அகியவற்றை நீக்கும் குணமுடையது.

குளிர் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும்,மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக கரைத்து மிளகளவு மாத்திரைகளாகச் செய்து காலை மாலை கொடுக்க காய்ச்சல் குணமாகும்.

ரத்த குறைவினால் ஏற்படும் சோகை வியாதிக்கும் கீழாநெல்லி ஒரு நல்ல மருந்தாக பயண்படுகிறது. கல்லீரல்,மண்ணீரல்,சிறு நீரகங்களின் வீக்கத்தையும் குறைத்து இரத்தத்தை சுத்தமடைய செய்கிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று மாந்தம், சீதபேதி முதலிய நோய்களுக்கும் கீழாநெல்லி சிறந்த மருந்தாக பயண்படுகிறது.இதை சுண்டைக்காயளவு பாலோடு அல்லது நீரிலோ கொடுத்து வர நோய்கள் விலகும்.

கீழாநெல்லி இலையை தேவயான அளவு அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிறு புண்கள் ஒழிந்து விடும்.


Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us