தியானத்தின் அனுபவங்கள்

தியான அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உள்ளது. சிலருக்கு தியானத்தில் ஏற்படும் அனுபவங்கள் சில நாட்களிலேயே ஏற்படும். இன்னும் சிலருக்கு 6 அல்லது 9 மாதங்களில் கூடத் தோன்றும். அது மனநிலை அல்லது மன ஒருமைப்பாட்டின் தரத்தைப் பொறுத்து அமையும். ஒரு சிலருக்கு இத்தகைய அனுபவங்கள் எதுவுமே தோன்றாத நிலையில் அவர்கள் சாதனையில் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். இந்த அனுபவங்கள் காட்சிகளாகவோ, ஒலிகளாகவோ, உணர்வுகளாகவோ பலவாறு அமைகின்றன. இவை எல்லாம் நம் மனதின் சிருஷ்டிகளே. சூக்கும உலகோடு தொடர்பு உடையவை. பஞ்ச பூதங்களின் தன் மாத்திரைகளின் பல தரங்களின் ஒழுங்கான அசைவுகளால் பல லோகங்களாக உள்ளது சூக்கும உலகம். ஜாக்ரதையில் நாம் செய்த நமது தீவிர சிந்தனையின் உருவகமாகவோ அல்லது முற்றிலும் கற்பனையாகவோ இருக்கும்.

நம் இஷ்ட தெய்வங்களையும் காணக் கூடும். சில வேளைகளில் நம்மை நாமே கூட காண்பது போன்ற காட்சிகளும் அமையும். பலவிதமான இனிய நாதங்களும் கேட்கும். கண்ணைக் கூசும் ஒளிகளும் தோன்றும். ஒழுங்காக விடாமுயற்சியுடன் தியானம் செய்யும் போது தியானத்தின் இலட்சியப் பொருள் வெகு விரைவில் நம் முன் தோன்றும்.

dhyanamதேவதைகள், நம் குரு, சித்தர்கள், ரிஷிகளின் தரிசனங்கள் கூட கிடைக்கும். தீவிரமான மன ஒருமைப்பாட்டின் போது மூலாதாரச் சக்கரத்திலிருந்து மின்சாரம் பாய்வது போன்ற உணர்வும் சிலருக்கு ஏற்படும். உடனே அவர்கள் பயந்து பௌதிக உணர்வு நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். பயப்பட வேண்டிய அவசியமில்லை. அச்சமின்மையே சாதனையில் வெற்றியைத் தரும்.மேலும், நாம் தியானிக்கும் பொருள் நம்மை அப்படி சுற்றிலும் படர்ந்து மூடுவது போலத் தோன்றும். விண்வெளி எங்கும் ஒளிர்வது போலத் தோன்றும். இவை எல்லாவற்றையும் கடந்த பேரமைதியையும் உணரலாம். இந்த அனுபவங்கள் பேரானந்தத்தைத் தரும். ஆனால் இவற்றால் எல்லாம் நாம் நம் இலக்கை அடைந்து விட்டோம் என்று சிலர் தவறாக எண்ணிப் பயிற்சியில் தடுமாற்றம் அடைந்து விடுகிறார்கள். தாங்கள் ஆத்மானுபூதி அடைந்து விட்டதாகக் கருதி சாதனையை நிறுத்தி விட்டு பிறருக்கு போதனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இது சாதனையில் மிகப் பெரிய வீழ்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தி விடும்.

இத்தகைய அனுபவங்களெல்லாம் இதற்கும் மேலான ஆன்மீக வாழ்விற்கு உங்களை அழைத்து சொல்வதற்கு தரப்படும் ஊக்கங்களே ஆகும். அவற்றில் லயித்து நம் இலட்சியத்தை இழந்து விடக் கூடாது. காட்சிகளும், அனுபவங்களும் வரும், போகும். இவைகளெல்லாம் சாதனையில் முடிந்த நிலைகள் அல்ல. இவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து சாதனையில் ஏற்படும் முன்னேற்றத்தை இழந்து விடக் கூடாது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து போக வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு தரப்பட்டுள்ளது. உள்ளார்த்தமான, நேரடியான பரம்பொருள் அனுபவம் ஒன்றே உண்மையானது. அதை நீங்கள் அடைந்து விட்டால் பிறகு உங்களுக்கு அப்பால் எதுவும் இல்லை. எல்லாவற்றிற்க் உள்ளும் நீங்களும், உங்களுக்குள் எல்லாமும் இருப்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

தகவல் பகிர்வர்: https://www.facebook.com/ram5665

 


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் முகநூல் குழுமத்தில் (Facebook Group) இனையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்களும் பயனுள்ள தகவல்களை பதியலாம்.

குழுமத்தின் பெயர் தமிழ் கடல்
குழுமத்தின் லிங்க் https://www.facebook.com/groups/264740130252643/ இதை click செய்து தமிழ் கடல் குழுமத்தின் உள்ளே நுழைந்து இனையவும்.

நன்றி.
தமிழ் கடல்

பஞ்சபூத தியானம்

அண்டத்தையும் பிண்டத்தையும் இணைப்பது தொண்டம் என்று ஶ்ரீவித்யையில் குறிப்பிடுவார்கள். அது போல அண்டத்தையும் பிண்டத்தையும் இணைக்கும் தொண்டனாக யோகம் திகழ்கிறது. உச்சியில், கயிலாய மலைமேல் இருக்கும் பரத்தை அடைய மலையைச் சுற்றிலும் பல வழிகள். எல்லாம் மலைக்கு மேலேதான் சென்று சேருகின்றன. அதைப் போலவே யோகங்களும் பலவிதமாக இருந்தாலும் பயன் ஒன்றுதான். ஏன் அப்படி? என்ற கேள்வி கேட்பவர்களுக்கு, ஒன்றைச் சொல்வேன். என்னவென்றால் இறையாற்றலாகிய இயற்கை பலவித பரிமாணங்களில் விரிந்து பரிணமித்திருப்பதால், அதில் எந்த விஷயத்தின் உள்ளே நீங்கள் மனதினால் சங்கமித்தாலும், இறைவனை அடையலாம். எனவேதான் கல்லிலும் கடவுளைக் கண்டு முக்தி அடைந்த ஞானிகளையும் காண்கிறோம். மன ஒருமைப்பாட்டுடன் உலகில் எந்த விஷயத்தைத் தொட்டாலும் இறையாற்றல் உங்களை உறிஞ்சி எடுத்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளும். வேதாத்ரியத்தில் பஞ்சபூத நவக்கிரக தவம் என்று ஒரு தவமுறையைக் கற்றுத் தருவார்கள். அதை முறையாகத் தவறாமல் கடைபிடித்து சில இக்கட்டான நேரங்களில் நான் சௌகர்யம் அடைந்திருக்கிறேன். இது என் அனுபவம். இதைப்போல நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களையும், பிண்டத்தில் உள்ள பஞ்சபூதங்களையும் இணைத்து தியானிப்பார்கள். இதை பஞ்சபூத தியானம் (அ) பரந்த தியானம் என்பார்கள். நம் உடலில் உள்ள பஞ்சபூதங்களினால் விளையும் உணர்ச்சிகளை அதன் போக்கில் விடாமல் கட்டுப்படுத்தி வெற்றி கொண்டோமானால், அண்டத்தின் இயற்கை சக்திகளை நம் விருப்பம் போல கையாளலாம். அந்த ஆற்றல் வந்து விடும். அதை அஷ்டமகா சித்தி என்பார்கள். நம் உடலாகிய பிண்டம், அண்டத்தோடு நமது மற்றொரு நுண்ணிய சரீரம் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. அதன் மூலமே அண்டத்தின் சக்திகள் நம் ஏழு ஆதாரங்களையும் தூண்டி செயலாற்றச் செய்கிறது. ஸ்தூல உடலில் உள்ள அந்த ஆதாரங்கள் பரு உடலின் நரம்பு மண்டலம் மூலமாக நம் முதுகெலும்பில் உள்ள ஏழு நரம்பு மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மத்திய தேகத்தில் வெளி ஆகாயத்தையும், பிராண வாயுவில் வெளி வாயுவையும், ஜடராக்கினியில் வெளி அக்னியையும், அப்புவின் அம்சத்தில் நீரையும், பிருதிவி அம்சத்தில் பூமியையும் சேர்த்து தியானிக்க வேண்டும். இவற்றிற்கு முறையே அ – ய – ர – வ – ல என்ற மந்திர அட்சரங்களை மனதுக்குள் உச்சரிக்க வேண்டும். அதாவது, பாதம் முதல் முழங்கால் வரை – பிருதிவி ஸ்தானம்.
முழங்காலுக்கு மேல் இடுப்பு வரை – நீர் ஸ்தானம்.
இடுப்புக்கு மேல் இருதயம் வரை – அக்னி ஸ்தானம்.
இருதயத்திலிருந்து புருவ நடு வரை – வாயு ஸ்தானம்.
அதிலிருந்து சிரசு உச்சி வரை – ஆகாய ஸ்தானம்.
இனி நீங்கள் ஆரம்பிக்கலாம். உங்கள் சுவாசத்தை பிருதிவி ஸ்தானத்தில் நிறத்தி ‘லம்’ என்ற கந்த பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானத்தில் இருக்க வேண்டும். இது நம் பிருதிவி அம்சத்தை பூமியோடு இணைக்கும் மூலாதார தியானமாகும். இதில் வெற்றி பெற்றவர்கள் மண்ணுக்குள் நாட்கணக்கில் இருந்தாலும் மரணம் சம்பவிக்காது. உடலுக்கோ உயிருக்கோ மண்ணால் எந்த சேதாரமும் ஏற்படாது.

சுவாசத்தை நீர் ஸ்தானத்தில் நிறுத்தி ‘வம்’ என்ற பீஜ அக்ஷரத்தை ஜபித்தபடி தினமும் இரண்டு மணி நேரம் தியானித்திட, நீரில் மிதக்கும் சித்தி கிடைக்கும். கடலுக்குள் சஞ்சரிக்கும் சித்தியைத் தரும். இந்தியானத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு நீரால் மரணம் ஏற்படாது.
சுவாசத்தை அக்னி ஸ்தானத்தில் நிறுத்தி ‘ரம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணிநேரம் தியானம் செய்ய வேண்டும். இதில் வெற்றி அடைந்தவர்களை நெருப்பு சுடாது. அக்கினியால் மரணம் ஏற்படாது.

சுவாசத்தை வாயு ஸ்தானத்தில் நிறுத்தி ‘யம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானிக்க வேண்டும். இதில் வெற்றியடைந்தவர்களுக்கு வாயு வேகம், மனோ வேகம் பெற்று எங்கும் சஞ்சாரம் செய்யும் சித்தி கிட்டும். இவர்களுக்கு வாயுவால் மரணம் ஏற்படாது.

அடுத்து சுவாசத்தை ஆகாய ஸ்தானத்தில் நிறுத்தி ‘அம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானத்து, சாதனையில் வெற்றி அடைந்தவர்களுக்கு ககன மார்க்கத்தில் சஞ்சரிக்கும் சித்தி கிட்டும். இவர்களுக்கு ஆகாயத் தத்துவத்தால் மரணம் ஏற்படாது. இந்த பஞ்சபூதத் தியானத்தில், அல்லது பரந்த தியானத்தில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. அது என்ன வென்றால் மனிதனுக்கு மரணம் பஞ்சபூதங்கள் வாயிலாகவே நடைபெற்றாக வேண்டும். அவற்றை ஒருவர் வென்று விட்டால் அவரை மரணம் தீண்ட முடியாதல்லவா ? இதில் வென்றவர்கள் மரணத்தை வெல்லலாம். தன் சரீரத்தை காற்றில் கரைக்கலாம். மீண்டும் சேர்த்து உருவமாகலாம். நம் சித்தர்கள் இந்த உபாயத்தைக் கைகொண்டுதான் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து இமயத்தில தவத்தில் இருக்கிறார்கள். அவர்களை போகர் இமயத்தில் போய் பார்த்துவிட்டு வந்து சொன்னது. அவரது பாடல்களில் உள்ளது. நம் தமிழகம் செய்த பெரும் பேற்றினால், நமக்குக் கிடைத்த மகா ஞானியும், சன்மார்க்க யோகியுமான அருள் பிரகாச இராமலிங்க அடிகளார் அவர்கள் இந்த முறையைக் கையாண்டுதான் காற்றில் கரைந்து ஒளியாகத் திகழ்கிறார். எனவே வள்ளலாரின் சன்மார்க்க நெறியில் ஒழுகி அவர் வழியில் நாமும் சென்று உலகுக்கு ஒளியாகத் திகழ்வோமாக.

வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்

தகவல் பகிரவர்

https://www.facebook.com/ram5665

தியானம் தொடர்ச்சி

மனம் குறித்த அடிப்படை விஷயங்களில் நாம் தெளிவு பெற வேண்டும் மனமானது மேல் மனம் ,உள் மனம் மற்றும் அடி மனம் என்ற மூன்று நிலைகளில் இயங்குகிறது நம்முடைய விருப்பு வெறுப்பு வெளிப்படையாக நம்க்கு தெரியும் மனம் மேல் மனமாகும். நம்முடைய ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் போராட்டங்கள், எதிர்பார்ப்புகள் , எண்ணங்கள் யாவுமே இந்த மேல மனத்தில் அறிய முடியும்.

நம்முடைய வாழ்கையின் அணுபவ பதிவுகள் காலப் போக்கில் உள் மனத்திற்குள் தள்ளப்படும். உள்மனத்திற்கும் கீழ் ஆழத்தில் மிக நீண்ட காலத்து பதிவுகளான நம்முடைய ஆசை,நிராசை, ஏக்கம், துக்கம்,விருப்பு,பயம் யாவும் அடிமனதில் தங்கிவிடும்.

தியானத்தில் எழுச்சி நிலை ஆனந்தம்தான். தியானத்தில் ஆனந்தம் ஏற்படாது கலைப்பும் சலிப்பும் ஏற்ப்பட்டால் அது தியானம் அல்ல. தியானத்தின் மூலம் உடலும் உள்ளமும் பூரண ஒய்வு பெறுகின்றது. தியானம் செய்யும் போதல்லாம் மனதின் ஆற்றல் பெறுகுகின்றது. தியானத்தினால் இயற்கையை அளும் சக்தி கிடைக்கிறது. சாதாரண அளவில் புலப்படாத பல பேருண்மைகள் தியானத்தினால் தெரிகின்றன.

தியானம் செய்யும்போது மயிர்கால்கள் எல்லாம் நன்கு திறந்துகொள்ளும். தியானத்தில் பலவகையுண்டு. தன் ஆன்மாவின் மீது தியானம் செய்வது ஆத்மதியானமாகும். ஒரு வடிவத்தை மனதில் நிறுத்தியோ அல்லது வடிவமில்லாமல் மந்திரத்தை ஜபித்து செய்யும் தியானம் மந்திர தியானமாகும். உள்ளுக்குள் இழுக்கும் மூச்சையும் வெளியில் விடும் மூச்சையும் கவனித்து கொண்டு தியானம் செய்வது சுவாச தியானமாகும். கடவுளை மனதுக்குள் கொண்டுவந்து பார்பது கடவுள் தியானமாகும்.

அனைத்து நோயளிக்ளுக்கும் மிகுந்த நன்மை தருவது தியானமாகும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தியானம் செய்தால் இரத்த அழுத்தம் குறையும். தியானம் நல்ல அழ்ந்த தூக்கத்தை தரும். மனதை ஒருநிலைப்படுத்தும். மூளையை ஒரு நிலையில் நிறுத்தி நம் ஆற்றலை அதிகப்படத்தும். தியானத்தின் முதற்பலன் மனதிற்கு அமைதி தருவது. தியானத்தினால் மனதில் உள்ள படபடப்பு குறையும். முகத்தில் உள்ள இறுக்கம் மறைந்து சிரிப்பு ஏற்படும்.

பத்மாசனம்,சித்தாசனம்,ஸ்வஸ்திக் ஆசனம், சுகாசனம் ஆகிய நிலைகளில் தியானம் செய்வதால் முதகெலும்பு வலுப்பெறும் ஆயுள் நீடிக்கும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு தியானம் நல்ல ஆரோக்கியம் தரும்.

தியானம் செய்யும்போது இறுக்கமில்லாத உடை அணிய வேண்டும். தியானம் செய்ய உட்காரும் இடம் மேடு,பள்ளம் இல்லாத சமமான தளமாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமும் சுத்தமும் உள்ள இடமமாக இருக்க வேண்டும். தினமும் நான்கு முறை தியானம் செய்யலாம் சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை நேரத்தில், நண்பகல் 12 மணியளவிலும், மாலை சூரியன் மறைந்த பின்பு, நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவிலும் தியானம் செய்யலாம்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே — அகத்தியர்

தியானத்தின் மூலம் நம் மனதை கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதினால் மந்திரம் செபிக்க வேண்டாமாம், பிராணாயாமம் செய்ய வேணடாம். வாசியை ஆதாரங்களில் நிறுத்த வேண்டாம் என்கிறார் அது தானாகேவே நடக்கும் ஆனால், மனது செம்மையாக்க மந்திரத்தை செபிக்க வேணடும் , வாயுவை உயர்த்த வேண்டும்,வாசியை நிறுத்தி பழக வேண்டும் பிறகு தான் மனம் செம்மையாகும்.


Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us