கிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று
கெணிதமுடன் செல்லுகிறே னன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
சுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விக்ஷ்ணு மூலி
ஆதிசக்தி தன்னுடைய வேருங் கூட்டிச்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே.
புலத்தியனே வசியமுறை ஒன்றை சொல்கிறேன் கேளு. சிவன் பூமியாகிய சுடுகாட்டிற்குச் சென்று நன்கு வெந்த அஸ்தியை நீ எடுத்து அத்துடன் விக்ஷ்ணு கிரந்தியின் வேரினைக்கூட்டி தாய்பால்விட்டு அரைத்து உருண்டை செய்து கொள்ள வேண்டும்.
செய்யடா உருண்டை தனையு லர வைத்துச்
செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்
வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.
இவ்வாறு செய்த உருண்டையை உலரவைத்து, நன்கு எருவடுக்கிப் (வரட்டி) புடத்தைப் போடவேண்டும். புடம்போட்டு வெந்த நீரை எடுத்து சவ்வாது புனுகு ஆகியவற்றை கூட்டி முறையாக “அங்” என்று ஒரு லட்சம் முறை ஓதி நெற்றியிலே பூசி அரசரிடம் சென்று நில்.
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
சிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்
அண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்
அப்பனே ஓம்கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்
பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு வார்கள்
துக்ஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய மாமே.
அவ்வாறு சென்றவுடன் அரசனும் வசியமாவான் மேலும் செகமோகமும் வசியமும் உண்டாகும். சிவனின் அருள் பெருகி அனைத்தும் வசியமாகும். முறையாக அமர்ந்து “ஓம்கிலிறீ” என்று ஒரு லட்சம் முறை ஓதி நெற்றியில் விபூதியை பூசிக் கொண்டால் எதிரிகள் உன்னை வணங்குவார்கள் துக்ஷ்ட மிருகங்கள் எல்லாம் வசியமாகும்.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்