அகத்தியர் – காப்பு

அகத்தியர் – காப்பு

பூரணமாய் நிறைந்தகுரு மலர்த்தாள் போற்றி
புகலுகிறேன் வைத்திய ரத்தினச் சுருக்கந் தன்னை
வாரணமா முகத்தோளைப் பணிந்து வாழ்த்தி
வைத்தியந்தான் முந்நூற்றோ டறுபதுக்குள்
காரணமாஞ் செந்துரம் பற்ப லேகியம்
கருவான தயிலமொடு கிருதமெண்ணெய்
சூரணமாக் கிராணமொடு கலிக்க மாத்திரை
களுவாக நாடிமுதற் சொன்னோம் பாரே

பூரணமாய் நிறைந்த சற்குருவின் மலர் பாதத்தை போற்றியும் , யானை முகத்தோனைப் போற்றியும், வைத்திய ரத்தினச் சுருக்கம் 360 என்ற இந்நூலில் செந்துரம், பற்பம், லேகியம், தைலம், கிருதம், எண்ணெய், கலிக்கம், மாத்திரை மற்றும் நாடி பார்க்கும் வித்தை சொல்லியுள்ளேன்

கரிமுகனடியை வாழ்த்திக் கைதனில் னாடிபார்க்கில்
பெருவிரலங் குலத்திற் பிடித்தடி நடுவே தொட்டால்
ஒரு விரலோடில் வாதம் உயர் நடுவிரலிற் பித்தந்
திருவிரல் மூன்றிலோடிற் சேத்தும நாடியாமே    —- அகத்தியர் வைத்திய ரத்தின சுருக்கம் – 360

யானை முகனான விநாயகனை வணங்கி பெருவிரலின் ஒரு அங்குலம் கீழ் ஆள்காட்டி விரல், நடு விரல் மற்றும் மோதிர விரல் கொண்டு கையை பிடித்து பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது ஆள்காட்டி விரலில் தட்டுகிற நாடியை வாதநாடி என்றும், நடு விரலை தட்டுகிற நாடியை பித்தநாடி என்றும், மோதிர விரலை தட்டுகிற நாடியை சிலேத்தும நாடி என்றும் கூறுகிறார்.

                                                                                                                                 


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்