கேளப்பா மூன்றுலட்சங் காப்பு சொன்னேன்
கிருபையுள்ள வர்தமது லட்சங் காப்பு
சூளப்பா வைத்தியத்திலிரெண்டு லட்சஞ் சொன்னேன்
அவற்றைக் குறுக்கியிரு காண்டஞ் சொன்னேன்
பாளப்பா வதைக்குறுக்கி பாதி யாக
அறுநூறு நாலுஞ் சொன்னேன்
வேளப்பா திராவகமென் நூறுஞ் சொன்னேன்
வேதமுறை யைந்நூற்றில் வெளி யிட்டேனே.
இதுவரை மூன்று லட்சம் பாடல்களை எழுதியுள்ளேன் அதில் பரம் பொருளைக் குறித்து ஒரு லட்சமும், வைத்தியத்தை பற்றி இரண்டு லட்சம் எழுதினேன். அவ்விரண்டு லட்சத்தை சுறுக்கி இரண்டு காண்டங்களாகப் பாடினேன். மேலுமதைச் சுருக்கி இரண்டாயிரத்து நானூறு பாடல்களாக எழுதினேன். இதை தவிர திராவகமுறைகள் எண்ணூறு பாடல்களாக படியுள்ளேன் மற்றும் வேத முறைகளை ஐந்நூறு பாடல்கள் இயற்றியுள்ளேன்.
வெளியிட்ட வைம்பதிலே மூன்றுஞ் சொன்னேன்
விபரமாய் முந்நூற்றிற்செந் தூரஞ் சொன்னேன்
வழியாக வெண்பதிலேமுப் பூவுஞ் சொன்னேன்
வைத்தியந் தானாயிரத்தைந் நூறுஞ் சொன்னேன்
அழியாத முன்னூறில் கர்ம தர்மம்
அன்பாக சொன்னதைநீ யறிந்து பாரு
முழியாதே நானுற்றிலி ரண்டுஞ் சொன்னேன்
மூடினதோர் நீற்றினமாம் நாலுநூறு
மேலுமொரு ஐம்பது பாடல்களில் வாத, வைத்திய யோக மார்கங்களைப் பாடியுள்ளேன். முன்னூறு பாடல்களில் செந்தூரச் செய்முறைகளை கூறியுள்ளேன். எண்பது பாடல்களில் தனி முப்பு முறைகளைக் பற்றி பாடியுள்ளேன். தனியே ஆயிரத்து நூறு வைத்திய முறைகளை பாடியுள்ளேன். முன்னூறு பாடல்களில் கர்ம தர்மங்களை அன்பாக கூறியுள்ளேன்.நானூற்றில் இரண்டையும் சொன்னேன். நீற்றின் முறைகளைப்பற்றி நானூறு பாடல்களை கூறியுள்ளேன்
நானூற்றில் வைத்தியமும்பூர ணமுந் தோன்றும்
நாடியுடன் குருநாடி நன்றாய்த் தோன்றப்
பாலான முப்பாலு நன்றாய்த் தோன்றப்
பாடினேன் வைத்தியபூர ணமிதப்பா
தேடினாற் கிடையாதிவ்வு லகத் துள்ளே
சிவயோகி வைத்திருப்பார்கொ டுக்கமாட்டார்
நாளாக வவர்களிடந் தொண்டு செய்து
நன்மையுடன் நூல்வாங்கி நாட்டம் பாரே — அகத்தியர் பரிபூரணம் 400
இந்நானூற்றில் வைத்திய முறைகளும், பரம்பொருள் அடையும் மார்க்கமும் நாடி முறைகளுடன் குருநாடியும் நன்றாய்த் தோன்றும். மூன்று முறைகளாக வாத வைத்திய யோகமார்க்கங்கள் தெளிவாய்த் தெரியும். தேடினாலும் இதுபோல் நூல் இவ்வுலகில் கிடைக்காது. சிவயோகிகள் வைத்திருப்பார்கள் கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு தொண்டு செய்து அவர்கள் அனுமதியுடன் நூலை வாங்கி படிக்கவும்.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்