தேவையானவை – பீன்ஸ் – 10, கேரட், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் – தலா 1, பூசணிக்கீற்று -1, அவரைக்காய் – 6, தேங்காய் துருவல் – 1 கப், மொச்சை – 100 கிராம், பச்சை மிளகாய் – 3, தயிர் – ஒரு கப், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை – காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் மொச்சை, உப்பு சேர்த்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும்வரை வேக வைத்து இறக்கவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாயை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனை தயிரில் விட்டுக் கலக்கவும். வேக வைத்த காய்கறிகளுடன் கலந்த தயிரைச் சேர்த்து கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் விட்டு, ஒருமுறை கொதித்ததும் இறக்கவும்.
குறிப்பு – பொரித்த அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன். இது அடைக்கு பொருத்தமான சைட் டிஷ்.