ஆசையை அடக்கலாமா

Posted by

உலகத்தில் ஆசை மற்றும் ஐம் புலன்களை அடக்கிவர்கள் என்று யாருமே இல்லை அனைவருக்கும் ஆசை உண்டு அந்த ஆசையை ஒரு கட்டுப்பாடுன் அனுபவிப்பதில்
எந்த ஒரு தவரும் இல்லை. நான் காமத்தை மட்டும் கூறவில்லை. அனைத்து விதமான அசைகளையும் தான் கூறுகிறேன். உதாரணமாக விருப்பமான உணவுகளை சாப்பிடுவது. பணம் சேர்க் ஆசைப்படுவது என அனைத்திற்கும் ஆசை படுவது தவறே இல்லை. எதிலும் ஒரு கட்டுப்பாடுடன் இருந்தால் நமக்கு நன்மையே பயக்கும். திருவள்ளுவர் பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை என்று சும்மாவ சொன்னாறு. நம் ஔவை தாயும் திரைகடல் ஒடி திரவியம் தேடு என்று சொன்னார்கள். நம்ம சிவபெருமானின் நேரடி சீடரான திருமூலர் ஒரு படி மேலாக ஆசை அடுக்குவதை பற்றி இந்த பாடலில் கூறுகிறார்.

அஞ்சும் அடக்கு, அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇல்லை;
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே

ஐந்து புலன்களையும் அடக்கி வாழ வேண்டும் என்று அறிவுறை கூறுபவர்கள் அறிவில்லாத முட்டாள்கள் என்று இந்த பாடல் மூலம் கூறுகிறார். இந்த ஐந்து புலன்களையும் அடக்கியவன் தேவ லோகத்திலும் இல்லையாம் . ஐந்தும் அடக்குவது அறிவற்ற செயல் என்று நான் தெளிந்து விட்டேன், ஐந்து புலன்களையும் அடக்காமல் அவைகளை முறை படுத்திக்கொள்ளும் மெய்யறிவினை இறைவன் எனக்கு தந்தவிட்டார் என்று கூறகிறார்.

இதனால் நான் சொல்லவருவது என்னவென்றால். நான் பக்தியா இருக்கேன்,நான் பெரிய ஆன்மீகவாதி என்று நினைத்து கண்டத அடக்கிவச்சிங்கனா ஒரு நாள் அது வெளியே வந்து அசிங்க படுத்திடும். நம்ம ஊரு சாமியாருங்க எல்லாம் இப்படிதான் அடக்கி அடக்கி ஒரு நாள் அசிங்கபட்டு போரனாங்க

சுரேஷ் ஸ்டாலின்