நில்லடா நிலை அறிந்து சுகத்தைக்காண
நிசமான ருத்திரனார் பதியைக்கேளு
சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க
சுகமான முக்கோணம் நன்றாய்க்கீறி
அல்லடா முக்கோணத் ததிலேநீதான்
அப்பனே பன்னிரண்டி தழ்தான்போடு
விள்ளடா செம்புனிற மான கோட்டை
விசையான கோட்டைநடு விந்துபோடே.
அடுத்தது ருத்திரனார் பதியாகிய அனாதகம் முக்கோணச் சக்கரம் சுற்றிலும் பனிரெண்டு இதழ்கள். செம்பின் நிறம்போன்ற சிவந்த கோட்டை அதன் நடுவில் விந்தினைப் போடுவாயாக. (அதாவது அதன் நடுவில் சிங் கலி என்று நினைத்து செப்பிக்கவேண்டும் என கூறுகிறார் என்று நினைக்கிறேன்)
போடப்பா விந்துநடு ஓங்காரந்தான்
பூரணமாய் சிங் கிலி யென்று நாட்டி
நாடப்பா விந்துநடு முனைமைத்தில்
நாடினின்று சிங்கிலியென்று சொல்லி
வீடப்பா பிலப்பதற்கு தினம் நூற்றெட்டு
விரும்பிமன தறிவதினா லுருவே செய்தால்
சூடப்பா தானேறி முனைமைத்தில்
சூரியன்போல் காந்திவெரு சோதியாமே.
விந்தின் நடுவில் ஓங்காரமிட்டு இதன் அட்சரம் சிகாரமாகையால் சிங் கிலி என்று நாட்டுவாயாக. தினம் நூற்றெட்டு முறை சிங் கிலி என்று உருச் செய்தால் உடம்பில் சூடேறும். மூக்கின் முனை மையத்தில் சூரியனைப் போன்ற ஒளி தோன்றும்
சோதியென்ற காந்தியடா சூரியகாந்தி
துலங்குநடுச் சுழினையைநீ கண்டாயானால்
ஆதியென்ற ஆதாரம் ஆறாதாரம்
அரூபமய மானதொரு மேலாதாரம்
நீதியடன் தோணுமடா வாசியாலே
நின்றிலங்கும் வாசிதன்னைத் தன்னுள்பார்த்து
சாதியென்று சராசரத்தைத்தானாயெண்ணி
சதாயோக பூரணமாய் நின்றுபாரே.
சுழிமுனையில் சூரிய ஒளி போன்ற பேரொளியைக் கண்டாயானால் ஆறாதாரங்களும் தோன்றும். வாசியைத் தன்னுள் கட்டுப்படுத்தி சராசரம் யாவுமே தானாக நினைத்து தானே பூரணமாய்க் கண்டு உணர்வாயாக.
பார்க்கையிலே ருத்திரனார் கடாக்ஷத்தாலே
பாதாதி கேசமுதல் நன்றாய்ப் பாரு
சேர்கையுடன் பார்கையிலே மைந்தாமைந்தா
என்ன சொல்வென் அக்கினிப்போல் ஆகுந்தேகந்
தீர்க்கமுடன் அக்கினிப்போல் தன்னுள் கண்டாற்
சிவயோக வாழ்வுவெகு திறமாய் நிற்கும்
மார்க்கமுடன் உருத்திரனார் பதியைப் பார்த்து
மனங்குவிந்து பூரணத்தில் மருவியேறே. —- அகத்தியர் சௌமிய சாகரம்
அவ்வாறு பார்க்கும்போது ருத்திரனார் அருளால் அடிமுதல் நுனிவரை, பாதம் முதல் உச்சிவரை உன் உடல் அக்கினிப்போல் தகதகக்கும். சிவயோக வாழ்வு உறுதியாகும். ருத்திரனார் பதியாகிய அனாகதத்தை பார்த்தப்பின் மேலே செல்வாயாக.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்