ஆறு ஆதார சக்கரம் – ஆஞ்ஞை

ஆறு ஆதார சக்கரம் – ஆக்கினை

காணவே மயேஸ்வரத்தின் சுடாக்ஷத்தாலே
கண்ணான சதாசிவத்தின் கருவைக்கேளு
தோணவே ஆக்கினையாம் விந்துவட்டம்
சொல்நிறைந்த வட்டமதில் இதழ்தான் ரெண்டு
பூணவே வட்டமதின் நிறந்தான் சொல்வேன்
புதுமைவெகு புதுமையடா ஆகாசந்தான்
பேணவே ஆகாச வட்டத்துள்ளே
பேர்பெரிய பிரணவத்தை நன்றாய் நாட்டே.

மஹேஸ்வரனின் கடாட்சத்தைப் பெற்றபிறகு ஆக்ஞாசக்கரத்தின் நடுவே வீற்றிருக்கும் சதாசிவத்தைக் காண்பாயாக. ஆக்ஞா சக்கரம் என்பது வட்ட வடிவமானது. அதன் இரு புறங்களிலும் இரு இதழ்கள் காட்சியளிக்கும். அதன் நிறம் ஆகாச நிறம். அந்த ஆகாச வட்டத்துள்ளே பிரணவத்தை நாட்டுவாயாக.

நாட்டமுடன் ஓங்கார நடுவிலேதான்
நன்மையுடன் அகாரமுடன் உகாரஞ்சாற்றி
தேட்டமுடன் ரீங்காரம் னுகாரஞ்சாற்றி
திறமாகத் தானிருந்து புருவமேகி
கூட்டமன்றி தானாகத் தானேநின்று
குணமாக அங்றீங் உம்மென்றேதான்
வாட்டமில்லா மனதாக தினம்நூறு மைந்தா
மார்க்கமுடன் தான் செபிக்க வரிசைகேளே.

பிரணவமாகிய ஓங்காரத்தின் நடுவில் அகாரம் உகாரம் ரீங்காரம் னுகாரம் சாற்றி ஒருமனதாக அங் றீங் உங் என்று தினம் நூறு முறை செபிப்பாயாக

வரிசையுடன் ஆதாரஞ் செபித்து மைந்தா
மார்க்கமுடன் சதாசிவத்தை மகிழ்ந்துகண்டால்
தெரிசனமாய் நின்றுதொரு ஆறாதாரஞ்
சிவசிவா அரூபமய மாகத் தோணும்
கரிசினமாய் நின்றதொரு ஆறாதாரங்
கண்ணடங்காத் தெரிசனங்கள் காணலாகும்
புரிசமுடன் சதாசிவத்தில் மனதை வைத்து
புத்தியுடன் அனுதினமும் பூசைபண்ணே.

அவ்வாறு செபித்தால் சதாசிவத்தைக் காணலாம். ஆறாதாரங்களும் அரூபமயமாகத் தோன்றும். கண்கொள்ளாக் காட்சிகளைக் காணலாம். சாதாசிவத்தின்மேல் மனதை வைத்து அனுதினமும் பூசை செய்வாயாக.

ஆறு அதாரங்களை நினைத்து யோக செய்யும் முறையான குண்டலினி யோகம் நிறைவு பெற்றது. அகத்தியர் முதல் ஏனைய பதினென் சித்தர்களில் பெரும்பாண்மையோர் அவர்களின் அனுபவத்திற்கு ஏற்றாற் போல் இந்த யோக முறையை கூறியிருக்கிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் ஒரு நல்ல குருவை நாடி பயிலுங்கள். உங்களுக்குள் உள்ள இறைவனையும், அதன் மகா சக்தியையும் கானுங்கள். ஒவ்வொரு மனிதனும் இறைவனின் அம்சமாகும். இந்த யோகம் மற்றும் தியனங்களை செய்து, இயற்கை நெறிகளை (ஒழுக்கம்,அன்பு etc..) பின்பற்றி வாழ்ந்துவருவான் என்றால்,.இயற்கையான பஞ்ச பூதங்களும் அவனுக்கு அடங்கும், அவனே இறைவனாகின்றான்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *