ஆறு ஆதார சக்கரம் – மணிபூரகம்

ஆறு ஆதார சக்கரம் – மணிபூரகம்

காணவே பிரம்மாவின் பதியைச் சொன்னேன்
கருவான மணிபூரகங் கருத்தைக் கேளு
தோணவே பிறை மூன்றாம் பிறைபோற்கீறித்
துலங்க அதில் ஈரைந்து பத்தும் போட்டு
பேணவே நிறமதுதான் பளிங்குபோலாம்
பிறைமூன்றாம் பிறை நடுவே மகராமிட்டு
பூணவே சங்கிலி மங்கென்றேதான்
பூரணமாய்த் தினம் நூறு செபித்துக்காரே.

பிறைபோல பிளவுப்பட்ட இரத்தினம்போல் விளங்குவது மணிபூரகம் அதைச் சுற்றிலும் பத்து இதழ்கள். பளிங்குபோன்ற நிறம் உடையது பிறைபோன்ற அதன் நடுவே மகாரம் இட்டு சங கிலி மங் என்று நாள்தோறும் நூறுமுறை செபம் செய்வாயாக.

கார்க்கவுரு செபித்து நடுப்புருவமதில்
கண்ணுமனக் கண்ணாலே நன்றாய்ப் பார்த்தால்
மார்க்கமுடன் லட்சுமியும் விஷ்ணுதேவர்
மகத்தான பூரணச்சந் திரன்போல் மைந்தா
யேர்க்கையுடன் இருதயத்தில் காணும்பாரு
இன்பமுள்ள தெரிசனத்தைத் கண்டாயானால்
தீர்க்கமுள்ள சிவயோக வாழ்வு பெற்று
செல்வபதி யாயிருப்பாய் தினமும் நோக்கே.

செபித்தபடி புருவ மையத்தில் பார்வையை நிறுத்தி மனக்கண்ணால் பார்த்தால் மகாலட்சுமியும் விஷ்ணுவும் பிரகாசிப்பார்கள் இன்பநிலையில் விளங்கும் அவர்களுடைய தரிசனத்தைப் பெற்றால் சிவயோக வாழ்வு பெற்றுச் செல்வபதியாக விளங்குவாய் அதனால் அவர்களை தினம்தோறும் தரிசனம் செய்.

நோக்குவது பூரணச்சந் திரனைநோக்கு
நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால்
மூக்குநுனி யந்தமதில் வாசிநின்று
நலங்காமல் தீபமதில் நாடும்பாரு
வாக்குமன தொன்றாகி நின்றுபாரு
மக்களே கன்பசுவு வாழ்வுண்டாகும்
தூக்குமென்ற கொடுமைதனை அகற்றிமைந்தா
சுகமான இடமறிந்து சுகத்தில் நில்லே. —- அகத்தியர் சௌமிய சாகரம்

தினந்தோறும் அவர்களை தரிசித்துப் பூரணமாய் நின்றாயானால் மூக்கு நுனியில் வாசி(மூச்சு) நிற்கும். அசையாத தீப ஒளி காணும். மனம் வாக்கு காயம் ஒன்றுபட்டு ஒருமனதாக அவர்களைத் தரிசிப்பது சுக வாழ்வை உண்டாக்கும்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *