ஆறு ஆதார சக்கரம் – மூலாதாரம்

ஆறு ஆதார சக்கரம் - மூலாதாரம்

இந்த மூலாதாரம் ஏறக்குறைய முதுகெலும்புக்குக்கீழ் உள்ளது என்று பார்தோம். இந்த பூமியின் மத்திய கருவில் நெருப்புக்குழும்பு (மூலக்கனல்) இருப்பதுபோல் மூலாதாரத்தில் இந்த மூலக்கனல் உள்ளது. இங்கு அன்னை (வாலை) சக்தி பாம்புபோல் சுருண்டு அமைதியாக உரங்குகிறாள் என்று கூறுகிறார்கள் இவற்றையே குண்டலினி சக்தி என அழைக்கப்படுகிறது

இதன் நிறம் மாணிக்கமாகும். இதற்கு அதிபதி கணபதி மற்றும் வாலை தாய். இது முட்டை வடிவமுடையது. இதனை சுற்றி நான்கு தாமரை இதழ் உள்ளதாம்.

கேளப்பா விபரமென்ன மூலாதாரங்
கிருபையுடன் கண்டுகொள்ள வகையைக்கேளு
காலப்பா தோன்றிநின்ற மூலாதாரம்
கருணையுடன் சொல்லுகிறேன் அண்டம்போலாம்
மேலப்பா அண்டமதிற் சூழ்ந்துநின்ற
விசையான இதழதுதான் நாலுமாச்சு
சூளப்பா நிறமதுதான் மாணிக்கம்போல்
சுகமாக நின்றுதடா மூலம்பாரே.

பாரப்பா மூலமென்ற முட்டைக்குள்ளே
பதியான அகூரந்தான் ஓங்காரமாச்சே
நேரப்பா நின்றுஓங் காரத்தோடே
நிசமான ரீங்காரம் உகாரங்கூட்டி
சாரப்பா தன்மனமே சாஷியாக
தன்மையுடன் தானிருந்து செபிப்பாயாகில்
காரப்பா கணபதியும் வல்லபையுமைந்தா
கனிவான உந்தனிடம் கனிவாற்காணே.

அந்த முட்டைக்குள் விளங்கும் அட்சரம் ஓங்காரம், ஓங்காரத்துடன் ரீங்காரம் உகாரம் கூட்டிச் செபித்தால் கணபதியும், வாலைத்தாயும் கனிவோடு தோன்றுவார்கள். (இதற்கு தெளிவான விளக்கம் தெரிந்தவர்கள் விளக்கலாம்)

காணடா கனிவாகக் கண்டாயானால்
கருணையுள்ள சிவலோகம் உறுதியாச்சு
பூணடா சிவலோகம் உறுதியானால்
பொற்கமலம் உச்சியிலே தீபங்காணும்
பேணடா தீபமதை தினமும் நோக்கிப்
பிசகாமல் வாசியிலே பிலமாய்நில்லு
தோணடா அவ்வாசிப் பிலமாய் நின்றால்
சுகசீவ பிராணகலை சுத்தமாச்சே.  –– அகத்தியர் சௌமிய சாகரம்

 

இதை கண்டுபிடித்து விட்டால் சிவயோகம் உறுதியாச்சு சிவலோகம் உறுதியானால் உச்சியில் பொற்கமலத்தில் ஒரு ஒளி தோன்றும் அந்த ஒளியை பார்த்து வாசியோகம் செய்தால். பிராண கலையில் தேர்ச்சி பெறுவாய்எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *