இடைக்காடருக்கு ஞான உபதேசம் செய்தருளியவர் போக முனிவர் என்றும், தாம் சமாதி கொள்ளப்போகும் முன்பாக புலிப்பாணியைப் பழநியிலும், இடைக்காடரைத் திருவண்ணாமலையிலும் இருந்து இறைத் தொண்டாற்றி வரும்படி போக முனிவர் கட்டளையிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்குச் சான்றாக இடைக் காடரின் சமாதி திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. எண்ணற்ற நூல்களை இடைக்காடர் இயற்றியுள்ளார். அவர் ஊர்வசி பஞ்சரத்தினத்தில்
பெருமையோர்கள் இடைக்காட்டுச் சித்தர் மொழி
பேசினார்கள் உலகம் தன்னில்
பேணியான் அறிவது ஏழு காண்டம் பெரு
நூலிதற்குச் சரியாகுமோ
ஏழு காண்டம் ஏழாயிரம் கவி
அல்லாமல் எண்ணூறது ஏழுநூல்
அஞ்சு நூறதற்கு அஞ்சு நூறதிலும்
ஏழதற்கு மேல் ஏழுநூறு
வாழு மூன்று நூறாயுதக் கலை
மாறி ஏழு நூறாவது
என்று தாம் இயற்றிய பல நூல்களைப் பற்றிக் கூறியுள்ளார்.
சோதிடக் கலையிலும் மிகச் சிறந்து விளங்கியவர் இடைக்காடர் ஆவார். இன்றும் பஞ்சாங்கங்களில் அந்த ஆண்டுக் குரிய பொதுப் பலன்களைக் கூறும் தனிப் பாடல் இடைக்காடரின் பாடலாக அமைந்துள்ளதைக் காணலாம்.
தருமாரி பின்பெய்யும், தான் முன்-முகில் சோர்ந்து
கொஞ்ச மழை பெய்யும் குலவு கழை தழைக்கும்
பஞ்சம் பருத்தி உப்பு பாழ்
அதாவது வெகுதான்ய வருடத்தில் மழை மிகவும் தாமதமாகப் பெய்யும். பருத்தி விளைச்சல் குறையும், உப்பு உற்பத்தி குறைந்து விலை ஏறும் என்று இடைக்காடர் அன்று உரைத்தவை உண்மையானது இன்றும் கண்கூடாகக் காண்கிறோம்.
ஒரு முறை தம் ஜோதிட ஆய்வின் மூலம் சிறிது காலத்தில் கொடிய பஞ்சம் ஏற்படும் என்பதை இடைக்காடர் உணர்ந்தார். முன்னேற்பாடாகத் தம்முடைய ஆடுகளுக்கு எக்காலத்தும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்ன கொடுத்துப் பழக்கினார். குறுவரகு என்ற தானியத்தை மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பிக் குடிசை கட்டிக் கொண்டார். எருக்கிலையை உண்ட ஆடுகள் உடலில் அரிப்பெடுத்து சுவரில் உராய்ந்தன. அதனால் மண் சுவரில் இருந்து உதிர்ந்த குறுவரகு தானியத்தைக் காய்ச்சி உண்டு வாழ்ந்தார். இவ்வாறு வரவிருக்கும் பஞ்சத்தை எதிர்கொள்ள இடைக்காடர் தம்மைத் தயார் படுத்திக் கொண்டார்.
எதிர்பார்த்தபடியே பஞ்சமும் வந்தது. உண்ண உணவும், அருந்த நீரும் இல்லாது மக்கள் மடிந்தனர். இதனால் ஊர்கள் பாழ்பட்டுப் போயின. நாடே மக்கள் நடமாட்டம் இன்றி பாலைவனம் போல் காட்சியளித்தது. ஆனால் இடைக்காடர் மட்டும் என்றும்போல் தம் ஆடுகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தார்.
இதைக் கண்டு நவக்கிரக நாயகர்கள் வியந்தனர். இது என்ன விந்தை நாடே பஞ்சத்தால் பாழ்பட்டுப் போய் உள்ளது. இடைக்காடர் மட்டும் எவ்வாறு வழக்கம்போல் வாழ்ந்து வருகிறார்? என்று புரியாமல் தவித்தனர். இதன் காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று கிரக நாயகர்கள் ஒன்பது பேரும் ஒன்றாக கூடி இடைக்காடரின் குடிசைக்கு வந்தனர்.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்