இராமதேவரின் விக்கலுக்கான மருந்து

இராமதேவரின் விக்கலுக்கான மருந்து

குழந்தைகளுக்கு விக்கல் வந்தால் நல்லது ஆனால் பெரியவர்களுக்கு விக்கல் வந்தால் அது ஆபத்தானது என்று பேச்சு வழக்கில் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உடலில் ஒரு சில உபாதைளின் காரணமாக ஒரு சிலருக்கு விக்கல் வருவதுண்டு. விக்கலினால் அவதிபடுபவர்களுக்கு இராமதேவர் என்ற யாகோபு சித்தர் ஒரு எளிய வழியை அருளியுள்ளார்.

கணபதிமுன் தூபமதைக் கல்வத்திட்டுக்
கரும்புரச மிடைசேர்த்து அரைத்துக்கொண்டு
பணவிடைதான் நுனிநாவில் தடவிப்பாரு
பஞ்சிலிட்ட தீப்போலே விக்கல்நாலும்
செணமதிலே ஓடிவிடும் ஓடாவிட்டால்
திரும்பதிரி நாட்கொள்ளச் சணத்திற்புக்குங்
குணமதனை யறிந்து கொள்ளு மென்றுசொல்லிக்
குற்றமில்லா யாகோபு கூறினாரே. — யகோபு (இராமதேவர்)

தூபம் = கற்புரம்
கணபதி முன் உள்ள கற்பூரத்தை கல்வத்தில் இட்டு அதனுடன் கரும்புச்சாரு சேர்த்து அரைக்க வேண்டுமாம். அதை நுனி நாக்கில் தடவினால் உடனே விக்கல் நீங்கும் என்கிறார் அப்படி நீங்கா விட்டால் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு துளி வீதம் உட்கொள்ள பஞ்சில் இட்ட தீப்போல விக்கல் ஓடிவிடும் என்கிறார்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *