இராமதேவர் வாழ்கை வரலாறு – பகுதி 1

இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில்,

மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு

உய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா

எனவுரைத்துள்ளார். இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.

ஒருமுறை காசிமாநகரில் திருக்கோயில் கொண்ட இறைவன் விசுவநாதரைக் கொண்டு வந்து தம் ஊரான காயாரோகணத்தில் (நாகப்பட்டினத்தில்) நிறுவிட இராமதேவர் எண்ணம் கொண்டார். இயல்பாகவே இவர் சஞ்சார சமாதியில் லயித்திடுவார். தாம் நடந்து கொண்டே இருந்தபோதும் இவரது எண்ணம் மட்டும் எங்கோ சென்றிருக்கும். எதனையும் இவரது கண்கள் நோக்கிடாது;  காதும் கேட்காது; சுவாசமும் ஓடாது.

 இத்தைய நிலையில்தான் இராமதேவருக்கு காசி விசுவநாதரை நாகப்பட்டினத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. உடனே எழுந்து இராமதேவர் விரைந்து நடக்கலானார். எத்தனை நாட்கள் அவர் நடந்தார் என்று அவருக்கே தெரியாது. சுயநினைவு இல்லாமலேயே அவர் நடந்தபடி சென்று கொண்டிருந்தார்.

ஒரு நாள் சுயநினைவு வரப் பெற்றார். அப்போது தாம் காசியில் இருப்பதை இராமதேவர் உணர்ந்தார். உடனே விரைந்து சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்த இராமதேவர் பின் காசி மாநகரத்து இறைவனான விஸ்வநாதப் பொருமானைக் கண்ணாரக் கண்டு தரிசித்து மகிழ்ந்தார். மீண்டும் வந்து கங்கையில் மூழ்கி அவர் எழுந்தார். அப்போது அவருடைய கரத்தில் லிங்கத் திருவுரு ஒன்று இருந்தது. அதைக் கண்டதும் இராமதேவர் மிகவும் மகிழ்ந்தார். மீண்டும் நாகப்பட்டினத்துக்கு வந்த இராமதேவர் தாம் கங்கையில் மூழ்கியெடுத்து வந்த காசி விஸ்வநாதப் பொருமானது திருவுருவமான இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். தினந்தோறும் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்திருவுருவை பூஜித்து வந்ததுடன் தியானத்திலும் மூழ்கினார்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *