இல்லறமே நல்லறம் – கோரக்கர்

கலியுகத்தின் இறுதி காலம்

வித்தென்ற மரமின்ன தென்று காணா
வீணர்களும் காவி கட்டி விருதாவாகப்
புத்தகமாங் காவியங்கள் புராண சாத்திரம்
புதுப்புதுப் பூசை வழி நிவே தனங்கள்
சுத்தமுடன் நியமவகை செப்பிடாமல்
சூதாகப் பிரட்டித்துச் சூட்ச மென்றே
இத்தரையில் மறைத்து வைத்தார் தீட்சை காணார்
இல்லறந்தான் இகபரத்தின் மோட்ச வீடே.

உடல் மரம் என்றும் உயிர் வித்து என்றும் உணராது வீணர்கள் தன்னையே குருவென்று கூறி காவி உடை அனிந்து திரிவார்கள். பல காவியங்களையும், சாஸ்திரங்களை படித்து பல கதைகலை அளப்பார்கள். புதுபுது பூசை வழிகளை கண்டுபிடித்து கடவுளுக்கு நிவேதனம் செய்து அவர்கள் உண்டு கொழுப்பார்கள். சரியை கிரியை யோக ஞானம் என்ற உண்மையான நெறிமுறைகளை கற்று கொடுக்காமல். உண்மையை அறியாமல் அது இரகசியம் இது இரகசியம் என்று கூறுவார்கள். அவரகள் தீட்சை பெற்று உண்மைப் பொருளை காணாதவர்கள். இல்லரத்தில் இருந்துகொண்டே நல்ல குருநாதரிடம் தீட்சை பெற்று தியானம் செய்வதே இகபர சுகத்தின் மோட்ச வீடு.

வீடென்ற வீடகத்தி னுண்மை காண
விளம்பிடுவேன் வெட்டவெளி யாகத்தானே
ஆடென்ற அரனவருஞ் சடா பாரத்தில்
அம்பிகையைச் சுமந்த வகை யறிந்து கொள்வீர்
நாடென்ற பிரமாவும் நாவிற் பெண்ணை
நயந்து வைத்தும் நானிலத்தில் நயமுற்றெய்தார்
சேடனெற்ற விட்ணுவுந் தன் னெஞ்சிற் றானே
சித்தமுடன் ஓர் மாதை வைத்திட்டாரே.

வீடென்ற உடம்பில் மோட்ச வீடாகிய சூட்சமத்தை அகத்தில் உண்மையாய் காணும் வழியை கூறுகிறேன். சிவன் தன் தலை முடியில் கங்கையையும் தன் உடம்பில் பாதி அம்பிகையையும் சுமந்து கொண்டுருக்கிறார். பிரம்மாவும் தன் நாவில் சரஸ்வதியை நயந்து வைத்தே இந்த நானிலத்தை விருப்பமுடன் படைக்கிறார். விஷ்ணுவும் தன் நெஞ்சில் லெட்சுமியை வைத்துள்ளார். இதனை அறிந்து கொண்டு பெண் துணை இல்லாமல் எதனையும் அடைய முடியாது என்று மூவரும் உணர்த்துகிறார்கள். இதை உணர்ந்து இல்லற தர்மத்தில் இருந்துகொண்டே இறைநிலையை அடைய உண்மையில் தியானம் செய்வீர்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *