இளநீர் – சித்தர்களின் ஆராய்ச்சி

இளநீர்-–-சித்தர்களின்-ஆராய்ச்சி

இளநீரின் பண்புகளையும் அதன் வகைகளையும் சித்தர்கள் ஆராய்ந்து நமக்கு வழங்கியுள்ளனர்.

இளநீரின் வகைகள்
செவ்விளநீர், கேளி இளநீர், பச்சிளநீர், மஞ்சள் கச்சி இளநீர், அடுக்கிள நீர், கருவிள நீர், சோரி இளநீர், ஆயிரங்கச்சி இளநீர், குண்டற்கச்சி இளநீர், கவுளி பாத்திரை இளநீர் என வகைப்படுத்தி உள்ளனர்.

இளநீர் பொதுவான குணங்கள்
இளநீரால் வாதபித்த மேகு மனமுற்
றெளிவாய்த் துலங்குமிரு திஷ்டிக் – கொளியுங்
குளிர்ச்யுமுண் டாகுங் கொடியவன னீங்குந்
தளிர்த்தகன நொய்தாகுஞ் சாற்று.

என்றுமிள நீர்நீ ரிறக்குங் கபமறுக்குந்
துன்றனலாஞ் சீதமெனச் சொல்லுவார்கள் – நின்றெழும்பும்
பித்தமொடு வாந்தியும் போம், பேதிக்கட்டி புண்ணுண்டாங்
கொத்தலரும் பூங்குழலாய் கூறு.

இளநீர் அருந்துவதால் உடலில் வாதம் பித்தம் தணியும் மனம் தெளிவடையும் கண்கள் குளிர்ச்சி அடையும். உடல் வெப்பம் தணியும் உடல் வீக்கம் குறையும். சிறுநீரக நோயான நீர்கட்டு, சொட்டு நீர் போன்ற நோய்களுக்கு இளநீர் அருந்தவதால் சீறுநீர் வெளியேற்றுவது சீராகும். சிறு நீரகத்தில் உள்ள சிறுகற்களை வெளியேற்றும்.
பித்தத்தையும் வாந்தியையும் நிறுத்தும். மலச்சிக்கலை நிறுத்தும்.

சித்தர்கள் புதிய இளநீரையே பருகவேண்டும் என்று கூறுகிறார்கள்

புதியிளநீர் பித்தமறும் பூதலத்தோ ருண்ணும்
பதமுடனே யுண்பார் பரிவாய் – நித்தமும்
உண்ணப் பழவிளநீ ருண்டாம் பலவகை நோய்
எண்ணி அறிவாய் இனி.

பழைய இளநீர் அருந்துவதால் பலவகை நோய்கள் உண்டாகும் எனவே பழைய இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

இளநீர் பற்றி மேலும் சில தகவல்களுடன் அடுத்த பதிவில்……..


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *