இளநீர் தொடர்ச்சி

இளநீர்-–-சித்தர்களின்-ஆராய்ச்சி

இளநீரை காயச்சி அருந்துவதால் இருமல் , உடல் வறட்சி, சுரம் போகும்
காய்ந்தா றியவிளநீர் காசங் கபந்தீர்க்கும்
விருப்பப்பட்ட நேரத்தில் இளநீரை அருந்த கூடாது. வழக்கமாக காலையில் இளநீர் அருந்துவதை பார்போம் ஆனால் அதில் நன்மை இல்லை. காலையில் இளநீரை அருந்துவதால் வயிற்றில் அமிலம் சுரப்பதை குறைத்துவிடும், பசி எடுப்பதை தடுத்துவிடும். வயிற்றில் எரிச்சல் உள்ளவர்களுக்கு காலையில் இளநீர் அருந்துவது சுகத்தை அளிப்பதாக இருந்தாலும் அது தற்காலிகமான சுகமே எனவே காலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவது தவிர்க்க வேண்டும்.

உணவை உண்டபின் அருந்துவதால் வாத, பித்த குற்றங்கள் அதிகமாவதைத் தடுக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும், மலச் சிக்கல் நீங்கும். அதிக பசி உண்டாகும். நோய் அணுகாது. உடல் மினுமினுக்கும்.
வாதபித்த மீறாது, வன்பயித்தி யந்தீரும்
கோதின்மலஞ் சாரும், கொடும் பசியாம், மாதரசே
மிண்டியநோய் வாராது, மேனி மினுமினுக்கும்,
உண்ட பின்பு நல்விளநீ ருண்.
காலை, மதியம் உணவு உண்டபின் இளநீரை அருந்துவது நல்லது. இளநீரை எப்பொழுது வேண்டுமானாலும் அருந்துவதும், குளிர் காலங்களில் அருந்துவதும் நல்லது அல்ல.

பச்சிளநீர் அருந்தினால் மேகம், பழைய சுரநோய்கள், கபம் இவற்றை நீக்கும், வயிற்றில் உண்டாகும் கிருமிகள், உடலில் எற்படும் யானை சொறி, கண்ணோய் இவற்றைப் போக்கும்.
பச்சிளநீர் மேகம் பழஞ்சுரங்க ளைப்போக்கும்,
கச்சுமுலை மாதே கபமறுக்கும், மெச்ச
வயிற்றிற் கிருமியொடு வன்சொறிகண் ணோயும்
அயர்த் தோடச் செய்யு மறி.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *