மனித நிலையே ஒரு இரண்டாஙக்கெட்டான் நிலை ஒரு குறிப்பிட்ட அலை வரிசைக்கு மேலும் ஒரு குறிப்பிட்ட அலை வரிசைக்கு கீழும் நம் காதுகள் ஓசையினைக் கேளாது ஒளியும் இப்படித்தான். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பார்க்க முடிவதில்லை ஓர் அளவிற்குக் கீழ் தெரிவதில்லை.
நாம் பார்க்க முடியாத இருட்டில் ஆந்தை, பூனை பார்க்கின்றன. நாய்கள் நம்மால் முடியாத மனத்தை நுட்பமாக உணருகின்றன. எதிலும் மேல் நிலை, கீழ் நிலை இருக்கின்றன. மனிதன் நடு நிலையில் இருக்கிறான் தேவர்களும் கடவுளும் மேல் நிலையில் இருக்கிறார்கள். இதே போல் நம்மால் அறிந்துக் கொள்ள முடியாத செய்திகள் கோடிக்கணக்கானவை நம் நிலைகளுக்குக் கீழும் மேலும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றையே அதல், சுதல், விதல் பாதாளம் போன்ற ஏழ கீழ் உலகங்களாகவும், பூ, புவர், ஸூவர் முதலிய மேலே ஏழு உலகங்களாகவும் ரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள்.
எல்லாமுணரும் அறிவுள்ள சேதனனான புருஷன் கர்மாக்களால் மறைக்கப் பட்டிருப்பதால், ஜீவனாக இருக்கிறான் அவனது மனதில் கீழே மறைந்து கிடப்பவைகளிலிருந்தும் மேல் நிலையிலுருந்தும் ஏதாவது காட்சிகள் கனவில் உலாவர வாய்ப்பிருப்பதால் யோகம் வளர, மனம் நிலைப்பட அதை உபயோகிக்கலாம் என்கிறார்.
இடைவிடாது சாதனை புரியம் சாதகனுக்கு கனவிலும் தூக்கதிலும் கூட அது தொடர வாய்ப்பிருப்பதால், அப்போது ஏதாவது ஞான நிலை கிட்டினால் அதை தியானப் பொருளாக்கலாம். சிலர் கதையின் முடிவையும். தீர்க்க முடியாத கணக்குகளின் விடையையும் கனவில் கண்டதாகக் கூறியுள்ளவைகளே சாட்சி.
பெரிய யோகிள், பிறரின் கனவில்.. சென்று தர்ம காரியங்களில் தூண்டி விடுவதையும் சிஷ்யர்களுக்கு அறிவுரை தருவதையும் செய்திருக்கின்றனர். அந்த வழியில் ஏதும் தியானப் பொருளாக கனவில் கிடைக்கலாம். கடவுள், தேவர், குரு மூலமாக மேல்நிலைக் காட்சிகள் அறிவுரை, மன நிலைகள் கனவில் கிடைக்கலாம். அது சித்த சாந்தியை தியானத்தில் தரக்கூடியதாக இருக்கும்.
ஆழ்ந்த தூக்கம் என்பது அபாவம் அதாவது எந்த விருத்திகளும் இல்லாத விருத்தி எனச் சொல்லப்பட்டுள்ளது. விருத்திகளை ஒடுக்கும் யோகத்தில் இந்த அபாவத்தை சமாதிக்கு மாதிரியாக வைத்து, தூங்காமல் அபாவத்தைப் பயிற்சி செய்ய தியானப் பொருளாகக் கொள்ளலாம்.
தூக்கதிலும் விழித்திருக்க அறிதலே இது.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்