பதஞ்சலி யோக சூத்ரம் 38 கனவு பற்றி கூறியுள்ளது அதை இங்கே சமர்ப்பிக்கிறேன்.
ஸ்வப்ன நித்ராக் ஞானா லம்பனம்வா
சொப்பனத்தில் ஆழ்ந்த தூக்கத்திலும் ஏற்படும் அறிவை தியானிக்கலாம்.
கனவிலும் தூக்கத்திலும் முதலில் நமக்கு ஞானம் ஏற்படுகிறதா என்பதை தெரிந்து கொள்வோம்.
கனவில் ஏதேதோ வருகிறது போகிறது சிலருக்குத் தான் கனவே ஞாபகத்தில் இருக்கும் உலக நியாயத்திற்குள் ஒட்டாமல் கனவு வருகிறது. பறக்க முடியாத மனிதன் பறப்பதாகக் கனவு காண்கிறான். ஏதேதோ உணர்ச்சிகள் அவை மட்டும் அப்படியே உண்மையாக ஏற்படுகின்றன அதனால்தான் பயத்தில் விழித்துக் கொண்டு விடுகிறோம்.
கனவு என்பது வழிப்புலகில். விழிப்புணர்வில் நாம் ஐந்து புலன்களால் அனுபவித்தவை. அனுபவிக்க ஏங்குபவை மனப்பதிவுகளாக உள்ளன. புலன்கள் வெளி உலகத் தொடர்பு அற்று உறக்க நிலைக்கு போகும்போது
ஹித் என்ற நாடியில் மனம் ஒடுங்குகிறது. அப்போது மனம் தனக்குத்தானே தனக்குள்ளிருப்பதை அவிழ்த்துவிட்டுப் படமாக ஓட்டும் போது, பிரகஞை உணர்வு உள்ளே அதைக் கவனித்துக் கொண்டிருக்கிற்து. இதுவே கனவாகும். அரை தூக்க நிலையில் நடைபெறுவது. இது வேறு உலகம் ஆகும் வேறு உடலில் வாழ்கிறோம். அந்த கனவு உலகில் நம் சூக்கும் உடலில் வேறு கால அளவில் வாழ்கிறோம் அந்த காலமே தனி. இதற்க்கும் விழிப்புலகிற்கும் தொடர்புபில்லை. கனவை பொய்யென்று எண்ணுகிறோம் அந்த வாழக்கையும் உண்மையானதே. நமக்கு நாமே கனவை படைக்கிறோம் என்று என்னுகிறோம் இல்லை இந்த உலகை படைத்த அந்த ஈஸ்வரனே நம் கர்ம பலனை அனுபவிப்பதற்காக இந்தக் கனவுலகை படைக்கிறான் என்கிறது உபநிஷத்து. இந்த உலகில் நாம் பார்க்காதது எதுவும் கனவில் வருவதில்லை. இதனாலேயே இந்த உலகில் செய்த வினைப்பயனின் அனுபவத்துக்காவே இந்த கனவுலக வாழ்க்கை வந்திருக்கிறது என நாம் உணரலாம். இதில் துன்பக் கனவும் கொடூரக் கனவும் வருகிறது இவைகளை நமக்கு நாமே உண்டாக்குவதில்லை அது இறைவனாலேயே படைக்கப்பட்டது.
கனவினால் நாம் அறியும் ஞானம் என்ன? அடுத்த பதவில் பார்போம்
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்