உன்னிய கர்ப்பக் குழியாம் வெளியிலே
பன்னிய நாதம் பகர்ந்த பிருதுவி
வன்னியும் வாயுவும் ஆயுறுஞ் சுக்கிலம்
மன்னிச் சமனாய் வளர்க்கும் உதகமே.
உதகம் உதிரம் உறுங்கனல் வாயுவால்
சிதகுறும் அங்கங்கள் செய்து முடித்திடும்
பதகுறும் உரோமம் பகர்தசை அஸ்தியின்
நிதகுறும் ஒன்பது வாசலும் நீங்குமே.
பெண்ணின் கருப்பையில் அவளுடைய நாதத்துடன் அக்னி, வாயு போன்ற பூதங்களுடன் கூடிய சுக்கிலமானது (உயிர் நீர், விந்து) கலந்து நிற்கும். இக்கலப்பு விகிதமானது சரி அளவிலிருக்கும் கலந்த இந்த நாத விந்தை சுற்றி உதகம் என்ற நீரானது சூழ்ந்துகொண்டு குழந்தையை வளர்க்கும் உதகம், உதிரம் அக்னி, வாயு போன்றவைகள் ஒன்றாகக் கூடி நின்று அங்கங்கள், ரோமம், தசை, அஸ்தி போன்றவைகளை உண்டாக்கி ஒன்பது வாசல் கொண்ட தேகமாக வளரச் செய்யும்.
ஒன்பது வாசல் என்பது.
கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துளைகள் இரண்டு, வாய் ஒன்று, மூத்திரத் துளை ஒன்று மற்றும் மலத் துளை ஒன்று.
அப்படி கரு வளரும்போது, பத்து வகையான வாயுக்கள் மற்றும் ஒரு ஆன்மா கருப்பையில் செல்லும் என்கிறார். இவைகள் செல்லும் வரை அந்த கரு வெரும் சதை என்கிறார்.
பத்துவகையான வாயுக்கள்.
பிராணன், அபானன், வியானன். உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்,
இந்த பத்து வகையான வாயுக்ளை இன்றய விஞ்ஞானத்தால் அறியப்பட முடியவில்லை ஆனால், நம் முன்னோர்களால் தோற்றிவிக்கப்பட்ட வர்மக்கலையில் இந்த பத்து வகையான வாயுக்களே முக்கிய பங்கு வகிக்கிறது.
நீங்கிட நீங்கிட நிமிர்ந்து வளர்ந்தோங்கும்
ஓங்கிட ஓங்கிட உறுகியாம் வாயுவும்
வாங்கிட வாங்கிட வன்னி தலைக் கொளும்
பாங்கிடப் பாங்கிடப் பத்தாகும் திங்களே.
திங்கள் பத்தாகி தேய்வோடு வாயு சேர்ந்து
அங்கி மலர்த்தி அமளியாக் கீழ் நோக்கி
பொங்கிப் பிறந்த நாள் புகழ்வார் வெறுவீணர்
தங்கிச் செனிக்கையில் தான்நோயும் உற்றதே.
நாளாக நாளாக கருப்பையினுள் உள்ள குழந்தையானது வாயுவில் உள்ள பிராண சக்தியை இழுத்துக் கொண்டு திடமானதாய் வளரும். திடங் கொண்டு வளரும் சமயத்தில் அக்கினியானது குழந்தையின் சிரசைத் தாக்கும். இத்தாக்குதலானது பத்தாவது மாதத்தில் அதிகமாகி இவ்வக்கினியானது அங்கு அடைப்பட்டுள்ள வாயுடன் கூடி குழந்தையை கீழ் நோக்கித் தள்ளும். கீழ்நோக்கித் தள்ளும் இந்நாளை மக்கள் பிறந்த நாளாக கொண்டாடுவர். இதே நாளில் குழ்ந்தையுடன் சேர்ந்து நோயும் பிறந்தது என்கிறார் திருமூலர்.
எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்
எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்
எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்