கிணற்றுக்கு வந்த கங்கை

திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள்

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிசநல்லூரில், ஸ்ரீதரஐயாவாள் என்னும் மகான் வாழ்ந்தார். ஒரு கார்த்திகை அமாவாசை நாளில், இவர் தன் தந்தையின் திதிக்காக ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு முதியவர், பசியோடு நிற்பதைக் கண்டு உணவிட்டபடியே, புரோகிதர் வரவுக்காக காத்திருந்தார். வந்த புரோகிதரோ மகானின் செயலைக் கண்டு திடுக்கிட்டார்.

“திதியன்று நாலாம் வர்ணத்தாருக்கு (அக்கால ஜாதியில் ஒரு பிரிவு) உணவிடுவது கூடாது. அதனால், கங்கையில் நீராடி வந்தால் தான், திதி கொடுக்க முடியும்,” என்றார். கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்க்குள் அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே என்று ஐயாவாள் வருந்தினார். உடனே ‘கங்காஷ்டகம்’ என்னும் ஸ்தோத்திரத்தால் கங்காதேவியை வழிபட்டார். என்னே! அதிசயம்! வீட்டில் இருந்த கிணற்றில் கங்கைநீர் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக் காடானது. மகானின் பெருமையை அறிந்த மக்கள் அதிசயித்தனர். பெருக்கை குறைத்துக் கொண்டு அந்தக் கிணற்றிலேயே நிரந்தரமாக தங்கும்படி, கங்கா தேவியை ஐயாவாள் கேட்டுக் கொண்டார். அதன்படி இக்கிணறு கங்கையின் புனிதத்தை அளித்து வருகிறது.

இந்நிகழ்வு நடந்த கார்த்திகை அமாவாசையை ஒட்டி, திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் மடத்தில் விழா நடக்கும். பஜனை, சொற்பொழிவு, கச்சேரி, அன்னதானம் இடம் பெறும்.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *