
நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி கூட்டுவது..
முதலில் கொரோனா வைரசுக்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் இந்தியாவில் பெரும் உயிரிழப்பு ஏற்படாமல் கட்டுப்படுத்தினோம்.
காலம் காலமாக நம் நாட்டில் பயன்படுத்திய இயற்கை, சித்த மருத்துவத்தை அரசு ஊக்கப்படுத்தியதோடு, அரசே சித்த மருந்துகளை நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வினியோகித்தது.
மக்களும் இயற்கை மூலிகை மருந்துகளையும், கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொண்டார்கள்.
தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையில் காட்சிகள் மாறுகின்றன. தடுப்பூசிகள் வந்துவிட்டன. 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
நம் நாட்டின் 138 கோடி ஜனத்தொகையில், சுமார் 12 கோடி பேர்களுக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மருந்துகளே கண்டுபிடிக்கப்படாத முதல் அலையின் காலகட்டத்தில் மக்களை காப்பாற்ற உதவிய
கதாநாயகன் கபசுரக் குடிநீர் பற்றியோ, சித்த, ஹோமியோபதி மருந்துகளைப் பற்றியோ இப்போது நாம் மறந்துவிட்டோம்!
தேங்காய்ப் பால்
இது ஒரு சிறந்த தேவாமிர்த உணவு. தாய்ப்பாலுக்கு இணையானது தேங்காய்ப்பால். இது உணவு மட்டுமல்ல, மருந்தும்கூட.தேங்காய் கொழுப்பு நிறைந்தது என்று பலரும் நினைத்து தவிர்க்கிறார்கள்.
ஆனால் அதில் உள்ளது நல்ல கொழுப்பு (HDL).தேங்காயை தினமும் பச்சையாக சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பு ஆற்றல் அபரிமிதமாகக் கிடைக்கும். நரம்புகள், எலும்புகள் வலுப்பெறும், ரத்த நாளங்கள் அடைபடாமல் பாதுகாக்கும், நுரையீரலில் கபம் கட்டாமல் சுத்தப்படுத்தும்.
வாழ்வின் கடைசி தருவாயில் இருப்பவர்களுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து வந்தால் வாழ்நாளை கூட நீட்டிக்க முடியும்.
தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் போன்ற சில வேதிப்பொருட்கள் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டவை.
கருப்பு திராட்சை
கருப்பு திராட்சை கொட்டையில் ரெஸ்வடிரால் போன்ற பல வேதிப்பொருட்கள் உள்ளன. அவை இருதயத்திற்கும், நுரையீரல், ஈரல் போன்ற உறுப்புகளின் செயல் திறனுக்கும் உதவுவதோடு, நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும்.
நாட்டு மாதுளை இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதோடு, ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும்.
இன்னும் நெல்லிக்காய் போன்ற எண்ணற்ற காய்கறிகளும், பழங்களும் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
மசால் பொருட்கள்
கொரோனாவினால் நம் நாட்டில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது உலகில் சர்ச்சையையே உண்டாக்கியது. பலரும் இதை ஆராய்ந்தனர்.
கடைசியில் அவர்கள் முடிவுக்கு வந்தது, நாம் உணவில் அதிகம் பயன்படுத்தும் மசால் பொருட்கள். மஞ்சள், இஞ்சி, மிளகு, ஏலக்காய், பூண்டு, லவங்கம் போன்றவை பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதாக முடிவுக்கு வந்தனர்.
மேலைநாட்டுத் துரித உணவுகளில் கிடைக்காத நோய் எதிர்ப்பு சக்தி நம்முடைய சாம்பாரிலும் ரசத்திலும் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.
கபசுரக் குடிநீர்
கபம் + சுரம் இரண்டையும் கட்டுப்படுத்தும் மருந்துதான் கபசுரக் குடிநீர். இதில் பதினைந்து வகை மூலிகைப் பொருட்கள் உள்ளன.
நுரையீரலில் கபம் கட்டி, சுவாசப் பாதையை அடைத்துக் கொண்டு மூச்சுவிட முடியாமலும், சளி வெளியே வராமலும் இருக்கும்.
கபசுரக் குடிநீர் பயன்படுத்துவதால் சுவாசப்பாதை விரிவடைந்து, கபத்தை வெளியேற்றும்.
இதிலுள்ள மூலிகைகளைப் பற்றி சில வார்த்தைகள்.
சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கம், கற்பூரவள்ளி இலை இவை மார்புச் சளியை கரைத்து, மூச்சு இரைப்பு, இருமலை கட்டுப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டும்.
நிலவேம்பு, சிறுகாஞ்சேரி, கோரைக்கிழங்கு இவை உடல் உஷ்ணத்தை குறைத்து, காய்ச்சலை கட்டுப்படுத்தும்.
கோஷ்டம், அக்ரஹாரம், முள்ளி வேர் ஆகியவை கிருமிகளையும், நச்சுப் பொருட்களையும் அழிக்கும்.
சிறுதேக்கு, சீந்தில், வட்டத்திருப்பி வேர் நோய் எதிர்ப்பு ஆற்றலைக்கூட்டி, வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.
ஆடாதோடை கபத்தை இளக்கி வெளியேற்றி, தொண்டை பிரச்னைகளை சரி செய்கிறது. இவை அனைத்தும் கஷாயமாக சுண்டக்காய்ச்சி பருகும் பொழுது, நல்ல நிவாரணம் கிடைத்து, நல்ல துாக்கத்தை கொடுக்கும்..
படித்ததில் பிடித்தது

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்
- இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
- இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
- அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
- அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
- ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
- இது ஒரு Ultra-Thin Sanitary Pads
இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்
மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD
தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்
எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்