கோரக்கரின் சந்திரரேகை – 200 உருவாகிய கதை

கோரக்கரின் சந்திரரேகை - 200 உருவாகிய கதை

கோரக்கர் அவர் இயற்றிய சந்திரரேகை 200 என்ற நூல் உருவாகிய கதையை அவரே சந்திரரேகை 200ல் கூறுகிறார்.

சூட்சியதாய்ச் சித்தர்கள் தாம் செய்து வைத்த
சூதான நூல்களுக் கெல்லாம் முன்னே
காட்சி பெறத் தெளிவாகக் களங்க மின்றித்
காளமேகம் கபாடப் பூட்டு கமலாஞ்சனி
தாட்சியிலாப் பிரமபோதம் திலதரவி
தகைமையறுஞ் சுரபிவிந்து லலாடப் பூட்டே.

சூட்சியாக சித்தர்கள் செய்து வைத்த மறைவான பரிபாஷை நூல்களுக்கெல்லாம் மெய்ப்பொருளை தெள்ளத் தெளிவாகக் குற்றமேது மின்றி கண்டுகொள்வதற்காக நாண் மறைப்பின்றி பலநூல்கள் எழுதிவைத்திருந்தேன். அவைகள்.

1) காளமேகம், 2) கபாடப் பூட்டு 3) கமலாஞ்சனி 4) பிரம போதம் 5) திலதரவி 6) சுரபி விந்து 7) லலாடப்பூட்டு.

பூட்டான பஞ்சவர்த்தம் மறலி வாதம்
புகழ் பெரிய சென்ம சித்து ஆன்ம சித்து
தாட்டிகமாம் வகார கந்தம் ஞானசோதி
தான் பெரிய சோடசரம் கல்ப போதும்
மேட்டியமையா நிலை யொடுக்கம் மேன்மையாக
மேதினியி லறிவதற்கு வெளியாயச் சொன்னேன்
நாட்டினிலே சித்தர்களின் புரட்டை யெல்லாம்
நானுணர்ந்து விவரமுடன் செப்பினேனே.

8) பஞ்சவர்தம் 9) மறலிவாதம் 10) சென்மசித்து 11) ஆன்ம சித்து 12) வகார கந்தம் 13) ஞான சோதி 14) சோடசரம் 15) கலப்போதம் 16) நிலையொடுக்கம்

இந்த மேன்மையான நூல்களை இந்த உலகில் உள்ளவர்கள் அறிந்து கொள்வதற்காக மிக வெளிப்படையாக சொல்லிருந்தேன். அனைத்து சித்தர்களும் பரிபாஷையாக எழுதிவைத்திருந்த நூல்களை உணர்ந்து மிக விளக்கமுடன் இந்த நூல்களில் சொல்லியிருந்தேன்

செப்பிவைத்த நூலையெல்லாம் சித்தரான
இடைக்காட்டார் அகப்பைமுனி நந்தி தேவர்
ஒப்பியே மச்சமுனி சட்டை நாதர்
பிரமமுனி யழு கண்ண ராண பேரும்
மெய்ப்பி என திட.மெய்தி யென்னூல் கேட்டார்
மேதினியில் தெரிந்துற்ற தாலே சித்தர்
தப்பிதங்க ளில்லாது தெளிவாய்ச் சூட்சம்
தாக்கினீர் மாந்தர் நமை மதியா ரென்றார்   –சந்திரரேகை 200 கோரக்கர்

இவ்வாறு சித்தர்களின் பரிபாஷையை நீக்கி கோரக்கர் எழுதிவைத்த நூல்கள் வேளியாகாமல் இருக்க இடைக்காடர் , அகைப்பை சித்தர், நந்தி தேவர், மச்சமுனி மற்றும் சட்டைநாதர் அவரை காண வந்தார்களாம். கோரக்கர் நூல்களை படித்த சித்தர்கள். கோரக்கரின் நூல்கள் சித்தர்களின் நெறிகளை பின்பற்றி நூல்கள் எழுதுப்படவில்லை என்றும், இந்த நூல்களில் சூட்சமங்களை தெளிவாக விளக்கி உள்ளது என்றும், இந்த நூல்கள் மாந்தரிகளிடம் கிடைத்தால் நம்மை மதிக்கமாட்டார்கள் என்றும் கூறினார்களாம்.

தொடரும் அடுத்த பதிவில் …………….

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *