சக்கரங்கள்

சக்கரங்கள்

நமது பரு உடலைச் சுற்றி இந்த எதிரிக் உடல் (Meterial body) ஒரு மெல்லிய பனிப்படலம் போல உள்ளது. பரு உடலின் அதே வடிவத்துடன் பாகங்களும் உறுப்புகளும் அப்படியே இருக்கும்.
ஒரு சிலந்திவலையிலுள்ள நரம்புகள் போல மெல்லிய சக்தி நரம்புகள் இந்த உடல் முழுவதும் பின்னிப் பிணைந்துள்ளன. சராசரி மனிதர்களுக்கு இந்த முதல் சக்தி உடல் பரு உடலில் இருந்து ஒன்றிலிருந்து ஐந்து செ.மீட்டர் வரை பரவியிருக்கும். நம் சக்சரங்கள் அனைத்துமே இந்த எதிரிக் உடலில் இருந்தே சழல்கின்றன.இவை அனைத்துமே நம் பரு உடலோடு இணைக்கப் பட்டுள்ளன.

சக்கரம் என்றாலே வட்டமானது, சுழல்வது என்பது நினைவுக்கு வரும். வண்டிச் சக்கரம், காலச் சக்கரம், விதியின் சக்கரம் என சுழலும் விஷயங்களை சக்கரம் என்று அறிவோம். எனவே இது காரணப் பெயர். ஆனால் நம் உடலுக்குள் எப்படி இந்த சக்கரங்கள்?  கேள்வி எழுகிறதல்லவா? நம் உடலிலுள்ள சக்தி மையங்கள் அனைத்துமே சுழன்று கொண்டேதான் இருக்கும். எனவேதான் அவற்றை சக்கரங்கள் என்று சொல்கிறோம். இந்த சக்கரங்கள் பிராணன் என்னும் உயிர் சக்தியைத் தேவைக்கு ஏற்ப நாடிகளுக்குள் செலுத்தும் சக்தி மையங்களாக செயல்படுகின்றன. சக்தியை உருவாக்கும் வல்லமையும் அவைகளுக்குண்டு. நம் பருஉடல் மட்டுமன்றி நமக்குள் ஐந்து சக்தி உடல்கள் இருப்பதாக இந்திய நாட்டில் வேதங்களும், வேதகால மருத்துவ நூல்களும் கூறுகின்றன.  அவற்றை கோசங்கள் என்றழைப்பார்கள். 1 அன்னமய கோசம்(Meterial Body) 2 வாயுமய கோசம்(Ethereal Body) 3 மனோமய கோசம்(Astral(Emotional)Body) 4 விஞ்ஞானமய கோசம்(Mental Body) 5 ஆனந்தமய கோசம்(Spiritual Body) மேற்கு திசை நாடுகளில் இவை ஏழு என்று சொல்லப் பட்டிருக்கிறது. 1 எதிரிக் உடல் – Meterial Body 2 உணர்வு உடல் – Emotional Body 3 எண்ண உடல் – Mental Body 4 ஆஸ்ட்ரல் உடல் – Astral Body 5 எதிரிக் டெம்பிளேட் உடல் – Etheric Template Body 6 செலஸ்டிகல் உடல் – Celestical Body 7 காசல் உடல் – Causal Body

நம் வேத கால ஆயுர்வேத நூல்களும், உபநிஷத்துகளும் சக்கரங்கள் குறித்து விரிவான விளக்கங்களை தந்துள்ளன. இந்த குறிப்புகளின்படி பார்த்தால் நம் உடல் முழுவதும் சிறியதும் பெரியதுமாக 28,000சக்கரங்கள் சழன்று கொண்டிருக்கின்றன. வர்மக்கலை புள்ளிகள், அக்குபஞ்சர் புள்ளிகள் அனைத்தும் ஒவ்வொரு சிறு சக்கரங்களே. நம் சக்கரங்கள் மட்டுமன்றி நாடிகளும் இந்த முதலாவத் சக்தி உடலில்தான் இருக்கின்றன. இந்த 28,000 சக்கரங்களில் 28 சக்கரங்கள் முக்கியமானவை என்று கருதப்படுகின்றன. இவற்றில் ஏழு சக்கரங்கள் முதன்மை சக்கரங்கள் எனவும், 21 சக்கரங்கள் துணைச் சக்கரங்கள் எனவும் வகைப் படுத்தியுள்ளனர்.

நமது முதுகெலும்பின் உள்ளேதான் தண்டுவடம் செல்கிறது. தண்டுவடத்தை வடமொழியில் ‘மேருதண்டம்’ என்பார்கள். இந்த மேருதண்டத்தின் நடுவில் (எதிரிக் உடலில்) கீழிருந்து மேலாக மூளையில் சென்று சேரும் முதன்மை நாடிதான் ‘சுழுமுனை’. ஏழு முதன்மை சக்கரங்களும் இந்த சுழுமுனை நாடியின் மேல் அமைந்துள்ளன.சுழுமுனையோடு இணைக்கப் பட்டுள்ளன. இவற்றுள் மூலாதாரச் சக்கரம் முதுகுத் தண்டின் கீழ்பகுதியிலும், சகஸ்ராரம் தலையின் மேற்பகுதியிலும் அமைந்துள்ளது. ஏழு முதன்மைச்சக்கரங்களின் பெயர்கள், 1 மூலாதாரம் 2 ஸ்வாதிஸ்டானம் 3 மணிபூரகம் 4அனஹதம் 5 விஷுதி 6 ஆக்ஞை 7 சகஸ்ராரம்.

மற்ற துணைச்சக்கரங்கள் அமைந்துள்ள இடங்களைப் பார்ப்போமா ?
1 வலது காதின் முன்புறம்
2 இடது காதின் முன்புறம்
3 வலது மார்பின் மேல்புறம்
4 இடது மார்பின் மேல்புறம்
5 தொண்டைக் குழிக்கு சற்று கீழே
6 வலது உள்ளங்கை
7 இடது உள்ளங்கை
8 வலது உள்ளங்கால்
9 இடது உள்ளங்கால்
10 வலது கண்ணுக்கு பின்னால்
11 இடது கண்ணுக்கு பின்னால்
12 வலது விரைக்கு பின்னால்
13 இடது விரைக்கு பின்னால்
14 கல்லீரலுக்கு மேல்
15 மண்ணீரலின் மேல்
16 வயிற்றோடு இணைந்து
17 வலது கால் முட்டிக்குப் பின்புறமாக
18 இடது கால் முட்டிக்கு பின்புறமாக
19 தைமஸ் சுரப்பிக்கு மேல்
20 சோலார் பிளெக்சஸ்சுக்கு மேல்
21 பெண்களுக்கு வலது சினைப் பைக்குப் பின்னால்.

இந்த துணைச் சக்கரங்கள் முக்கியமான வர்மப் புள்ளிகளாகும். இந்த 28 போக மீத முள்ள சக்கரங்கள் அளவில் மிகச் சிறியனவாக உள்ளதால், அவற்றைச் ‘சிறு சக்கரங்கள்’ என வகைப் படுத்தியுள்ளனர். நமது உடல் முழுவதும் நாடிகள் ஒரு வலை பின்னல்போல் பரவி நிற்கின்றன. இந்த நாடிகள் அனைத்தும் சக்கரங்கள் எனும் சக்தி மையங்களோடு இணைக்கப் பட்டுள்ளன. இவை உடலில் உருவாகுக் சக்தியை சக்கரங்களுக்கு சுமந்து வருகின்றன. சக்கரங்கள் இந்த சக்தியை உருமாற்றம் செய்து, பிராண சக்தியாக மாற்றி, மீண்டும் நாடிகளின் வழியாக உடலுக்கு அனுப்புகின்றன. இதுமட்டுமின்றி ஒவ்வொரு சக்கரமும், ஒவ்வொரு விதமான பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, உருமாற்றம் செய்து, பிராண சக்தியுடன் இணைத்து நாடிகளின் வழியாக உடலின் தேவையான பாகங்களுக்கு அனுப்பி வைக்கின்றன.

ஒரு சக்கரத்தில் எத்தனை நாடிகள் இணைகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டே முதன்மையா, துணையா அல்லது சிறுசக்கரமா என்பது தீர்மானிக்கப் படுகிறது. முதன்மை சக்கரத்தில் 21 நாடிகள் வந்து சேர்கின்றன. துணைச் சக்கரத்தில் 14 நாடிகள் வந்து சேர்கின்றன. சிறு சக்கரங்களில் 7 நாடிகள் வந்து சேர்கின்றன. வந்து இணையும் நாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க சக்கரங்களின் அளவும் பெரியதாகின்றது. அதில் வந்து சேரும் அல்லது அதிலிருந்து வெளியேறும் சக்தியின் அளவும் அதிகரிக்கின்றது. முதன்மை சக்கரங்களின் விட்டம் 4 லிருந்து 6 இஞ்சுகள் துணைச் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 3 இஞ்சுகள் விட்டமுள்ளவை சிறு சக்கரங்கள் ஒரு செ. மீட்டருக்கும் குறைவான விட்டமுடையவை. புலன்கள் கூர்மை பெறும் போது சக்கரங்களில் இருந்து வெளிவரும் ஒலி அலைகளைக்கூட கேட்க முடியும். ஒவ்வொரு முதன்மை சக்கரத்திலிருந்தும் ஒவ்வொரு வகையான ஒலி அலைகள் வெளிவருகின்றன. தொடர்ந்து சுழலும் சக்கரம்………..

நூல் ஆதாரம் – சக்தியைப் பெருக்கும் சக்கரங்கள்.

தகவல் பகிர்ந்தவர் – https://www.facebook.com/ram5665


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *