சிவராத்திரி கொண்டாட காரணம்

சிவராத்திரி கொண்டாட காரணம்

சிவராத்திரியை பற்றி பல கதைகள் உண்டு அதில் இரண்டு கதைகள் இங்கே சமர்பணம்.

கதை 1
பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம், “உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது?” என்று கேட்டாள்.

மாசி மாத தேய்பிறை 14-ம் நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும் பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்கு கால பூஜை நடத்த வேண்டும்.
வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது,” என்றார்.

சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர்.

கதை 2
ஒரு நாள் கயிலாயத்தில் பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தன் கரங்களால் மூடினாராம். சிவனுடைய இரு கண்களும் சூரியன், சந்திரனாக செயல் படுவதால் இந்த உலகமே இருண்டு விட்டதாம். இதனால் இந்த உலகமே அவதியுற்றதாம். இதனால் சிவபெருமான் தன் அக்னிகனலான தன் மூன்றாவது கண்ணை திறந்தாரம். உலக மக்கள் அதை கண்டு மிகவும் பயந்து விட்டார்களாம். பார்வதி தான் அறியாமல் செய்த குற்றத்தை அறிந்து, பார்வதி இரவு நான்கு ஜாமங்களிலும் இறைவனை பூஜை செய்து வழிபட்டாராம்.

பார்வதியின் பூஜையில் மகிழ்வுட்ட சிவ பெருமான் தன் மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஒளியை அருள் ஒளியாக மக்களுக்கு வெளியிட்டாராம் பிறகு பார்வதியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று வினவினாராம் அதற்கு பார்வதி நான் பூஜை செய்த இந்த இரவு சிவராத்திரியாக உலக மக்கள் கொண்டாட வேண்டும் என்றும் மேலும் இரவு நான்கு காலமும் பூஜைகள் செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று வேண்டினாராம். இதன் காரணமாக சிவராத்திரி இரவில் கொண்டாடப்படுகிறதாம்.

எது எப்படியோ சிவராத்திரியன்று சிவாயநம என்று மனதிற்க்குள் செபம் செய்து தியானம் செய்தால் இந்த இயற்கை மனிதனுக்கு உள்ளே உள்ள சக்தியையும் அதிசயத்தையும் எளிதில் உணர்த்தும் என்பது அனுபவசாலிகளின் கருத்து மேலும் ஒளியாக உள்ள இறைவனை நம்முள் உணரமுடியும். சிவாயநம என்ற இந்த ஐந்தெழுத்து மந்திரம் பஞ்சபூதங்களை குறி்க்கும். இந்த மந்திரத்தை தினந்தோறும் நினைத்து தியானம் செய்வது மிகவும் நல்லது


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஜாவா(Java) ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *