சிவலிங்கம் – பொருள் படித்ததில் பிடத்தது.

சிவலிங்கம் என்பது ஆண் உறுப்பும், பெண் உறுப்பும் கலந்த பிணைப்பு என்பது சில ஆன்மீகம் அரியாத பைத்தியங்களின் கருத்து!

இன்று மாற்று மதத்தினர் விமர்சிக்கின்றனர். நமது மதத்தை பற்றி விமர்சனம் செய்யும் பொழுது சிவலிங்கத்தின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? என்று கேட்கின்றனர்.

இவ்வளவு கொச்சையான ஒரு வழிபாடுகளை செய்து கொண்டு உங்கள் தெய்வங்களை நீங்கள் உயர்த்தி பேசுவீர்களா? இதில் எது உண்மை?

எனக்கும் கோபம் தலைக்கேறியது.
உண்மைக்குப் புறம்பான சில விஷயங்களைப் பேசும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு அல்ல, எல்லார்க்கும் கோபம் வரும்

சிவலிங்கத்தின் அமைப்பு என்பது நீங்கள் சொல்வது போல கொச்சையான வடிவம் அல்ல.

நம் முன்னோர்கள் அறிவில் மிகவும் சிறந்தவர்கள். விஞ்ஞானம் வருவதற்கு முன்பே, ஒன்பது கோள்களையும் கண்டு பிடித்தவர்கள். எந்த ராக்கெட் சேட்டிலைட் உதவிகளும் இல்லாமல் ஈரேழு உலகங்களையும் 37 கோணங்களையும் அறிந்தவர்கள். இங்கிருந்து கொண்டு எந்த கோள்களில் என்ன இருக்கும், எந்த கோள்களில் மனிதன் வாழலாம்!என்று அன்றே கண்டறிந்தவர்கள்.

அவர்கள் சிவலிங்கத்தின் இந்த வடிவமைப்பை காரணமில்லாமல் அமைத்து இருக்க மாட்டார்கள் என்று உங்களுக்கு புரியவில்லையா என்று கேட்டேன்?

இப்பொழுது சொல்கிறேன், கேளுங்கள், அறியாத பிற மக்களுக்கு புரிய வையுங்கள்.

ஆதி சிவனியத்தில், மனிதனின் நாசி துவாரம் முதற்கொண்டு மேல் நோக்கி உச்சம் சென்று, பின் மண்டையை சுற்றி வந்தால்,

அதன் வடிவமே சிவலிங்கத்தின் வடிவம்!!!

அப்படி சுற்றும் போது நடு மண்டைக்குச் செல்கையில், அருவமாக ஒரு ஒளி தெரிகிறதே,

அது தான் சிவம்!!!

இதை தான் திருமூலர் சிவம் இணங்குமிடம் என்கிறார்!

இதை தான் இப்போது “Pituitary Gland” என போற்றுகின்றனர், சிலர் குண்டலினி சக்தி என்கின்றனர்.

மூச்சு நாசி வழி சென்று சுற்றி உள்ளே செல்வதால் அதுவும் சிவமாக கருதபடுகிறது. அதனால்தான் என் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பது போல ,
ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் சிவனே பிரதானம் என்கிறோம். சிவன் நம் சிரசுக்குள் லிங்கமாக இருப்பவர்.

இப்பொழுது புரிகிறதா லிங்க வழிபாடு என்பது நமது சிரசில் உள்ள ஆணவத்தையும், மாயையும் அகற்றி சர்வமும் சிவமே என்பது போல உலகில் என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு செல்ல, வாழும் வரைக்கும் நல்ல நினைப்போடு வாழ்வோம் என்ற ஜோதி மனதில் உருவாவதுதான் சிவலிங்கத்தின் பூரண வழிபாட்டின் பலன்.

இதை தான் ஹிந்துகள் போற்றினர், சிவ வழிபாடு செய்தனர்.

*ஆண் உறுப்பும், பெண் உறுப்பும் இணைப்பு என்று நம் சமயத்தை பற்றிய இறியாமையால் இதனை கொச்சை படுத்தாதீர். இதைப்பற்றி தெரியாதவர்களுக்கு இந்த படத்துடன் காண்பித்து கூறுங்கள்.

தமிழகடல் YouTube Channelயை Subscribe செய்து அனைத்து ஜாவா கணினி தொழில் நுட்பங்களை தமிழ் வழியில் எளிமையாக கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் நன்பர்கள் மற்றும் உறவுகள் ஜாவாவை கற்கவிரும்புவோர்கு நம் தமிழ்கடல் வளைதளம் மற்றும் YouTube Channelயை பகிரவும். நன்றி
https://www.youtube.com/channel/UCkWb_XhWh-6mVGeqViKGX-Q