சிவவாக்கியம்

சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு – பாகம்3

Posted by

அவர் செல்லும் வழியெங்கும், தன் குரு உபதேசித்தபடி தவம் இயற்றினார். இச்சாதனையின் பயனாய் கலைமகள் அவரது நாவிலிருந்து நடமிட்டாள். தாம் அனுபவித்து அறிந்த அற்புத விபரங்கள் அனைத்தையும் அரிய பாடல்களாக இயற்றினர்.

Fashion Jewellery

அவர் செல்லும் இடங்களில் வாடும் மக்களுக்கு மெய்யறிவைச் சிவவாக்கியர் புகட்டினார். அவர் காட்டியருளிய அறநெறியை ஆங்காங்கே வாழ்ந்த மக்களில் சிலர் அலட்சியம் செய்ததுடன் தூற்றவும் செய்தனர். பெண்களில் சிலர் சிவவாக்கியரின் இளமை ததும்பும் எழிலொடு கூடிய உடலை நோக்கியவாறு இருந்தனர். இவ்வாறு தம்மை நோக்கிய பெண்களிடம் தாம் கொண்டு வந்த மணலையும், பேய்ச்சுரையையும் எவளொருவள் பக்குவமாய்ச் சமைத்துத் தருகிறாளோ அவளைத் தாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறியதும் இது நடக்க கூடியதா…. என்று ஏளனம் செய்தவாறு அப்பெண்கள் ஒதுங்கிச் சென்றனர். அவ்வாறு ஒதுங்கிச் சென்றிட முயன்ற பெண்களிடம் அவர், எண்ணத்தில் தூய்மை இருக்குமானால் எதையுமே செய்திட இயலும், என்றுரைத்து விட்டுத்தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஒரு நாள் பகல் பொழுதில் சிவவாக்கியர் குறவர் குலத்தவு வாழும் பகுதியை வந்தடைந்தார். அவரது வருகையைக் கண்ட குறவர் குலத்துக் கன்னி ஒருத்து ஏதோ ஒர் தூண்டுதலால் வெளிவந்து அவரைப் பணிந்து வணங்கி நின்றாள். அவளிடம் சிவவாக்கியர் அவளது பெற்றோர் பற்றி வினவினார். அதற்கு அவள், எனது பெற்றோரும் மற்றவர்களும் காட்டில் மூங்கில் வெட்டி எடுத்து வரப் போயுள்ளனர். அவர்கள் வெட்டி எடுத்து வரும் மூங்கில்களைப் பிளந்து கூடை, முறம் முதலானவற்றைச் செய்து விற்றுப் பிழைப்பது எங்கள் குலத் தொழில், எனக் கூறினால். மேலும் அவள் தன் பெற்றோர் அவ்விடத்தில் இல்லாதிருந்தாலும், அவர் இடும் பணி எதுவாயிருந்தாலும் அதனை ஒரு மனதாய்த் தான் முடித்து வைப்பதாகவும் கூறினாள்.

Hygiene sanitary napkin

தன்னைப் பணிந்து வணங்கியதுடன் தான் இடும் கட்டளை எதுவாயினும் அதனை ஒருமனதாய் முடித்து வைக்கத் தயாராக இருந்த அக்குறவர் குலத்துக் கன்னியிடம், சிவவாக்கியர், தனக்கு மிகுந்த பசியாக இருப்பதாகவும் தன்னிடம் இருக்கும் மணலையும், பேய்ச் சுரையையும் கொண்டு தனக்கு உணவு சமைத்துத் தர அவளால் முடியுமா? , என்று வினவினார். அது கேட்டதும் அப்பெண் பிற பெண்களைப் போன்று அவரை ஏளனம் செய்து ஒதுக்காது, தன்னிடம் கேட்பது தவமுனிவர். அவர் கூறுவது எதுவாயினும் அதன்படி நடப்பது தனது கடமை என எண்ணிச் சிவவாக்கியர் தன்னிடம் அளித்த பொருள்களைக் கொண்டு சமைக்கத் துவங்கினாள். சற்றுநேரத்தில் எவ்விதக் குறையுமின்றி அவள் சமையலை முடித்துத் தான் சமைத்த உணவை உண்ண சிவவாக்கியரை வணங்கி நின்றாள்.

fashion jewellery

தான் அவளிடம் தந்த பொருள்கள் இன்னது என அறிந்திருந்தபோதும் ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசாது தான் உரைத்தபடி செவ்வனே சமையலை முடித்து நிற்கும் இக்கன்னியே தம் குருநாதர் வாக்குப்படி தாம் மணந்து கொள்ள ஏற்ற குலமகளாவாள் என்று உணர்ந்தார்ய பின் அவள் தமக்குப் பரிமாறிய உணவை உண்டு பசியாறிய சிவவாக்கியர் அங்கேயே அமர்ந்து ஓய் வெடுத்தார். மாலைப் பொழுதானது………..தொடரும்


Hygiene sanitary napkin

எங்களிடம் தரமான பக்கவிளைவுகள இல்லாத மூங்கிலால் ஆன மற்றும் சுத்தமான காட்டன் துனியால் ஆன சானட்டரி நாப்கீன்கள் விற்பனையில் உள்ளது. அதை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்

  • இயற்கையான மூங்கிலால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • கலப்படம் இல்லாத காட்டன் துனியால் செய்யப்பட்ட சானட்டரி நாப்கீன்கள்
  • இயற்கை சூழலை பாதிக்காத சானட்டரி நாப்கீன்கள் Eco-Friendly Sanitary Pads
  • அரிப்பு மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத நாப்கீன்கள்
  • அற்புதமான உறிஞ்சும் தன்மையை கொண்டது.
  • ஒவ்வொரு நாப்கீன்களையும் வெளியை எடுத்துச்செல்ல சிறிய கவர்களுடன்கூடியது.
  • இது ஒரு Ultra-Thin Sanitary Pads

இபபோழுதே எங்கள் நாப்கீன்களை வாங்கி பயன் பெருங்கள் இங்கே க்ளிக் செய்யவும்

மேலும் பெண்களுக்கான அனைத்து Fashion Jewellery வகைகள் எங்களிடம் உள்ளது. PINEPAD இணையதளத்தின் உள்ள சென்று அனைத்தையும் கானுங்கள். நியமான விலையில் அனைத்து பொருட்டகளையும் shop செய்யது மகிழுங்கள் PINEPAD


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


எங்களுடைய ஆங்கில மற்றும் தமிழ் வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ஆங்கில வழி கல்வி
ITGARDEN YouTube செனல்
தமிழ் வழி கல்வி
TamilKadal Tamil YouTube செனல்


Leave a Reply

Your email address will not be published.