சீன தேசத்தூக்கு சென்ற சித்தர்

bogar

சீன தேசத்தூக்கு சென்ற சித்தர் என்று சொன்னதுமே நமக்கு நினைவுக்கு வருவது 7ஆம் அறிவில் நமக்கு அறிமுகப்படுத்திய போதி தர்மரே ஆனால் அவரை பற்றி நான் இங்கு பேச போவதில்லை.
 நம் தமிழகத்தை சேர்ந்த போக முனிவர் என்ற சித்தர் சீன தேசம் சென்று அங்கு பல காலம் வாழ்ந்து வந்தார். போகர் தமிழில் என்னற்ற நூல்களை எழுதியிருந்தாலும், சீன மொழியில் அதைவிட அதிகமான நூல்களை இவர் இயற்றியுள்ளார். சீன தேசத்தில். இவர் போ-யாங் என்ற பெயர் கொண்டாடிருந்தார் என்றும், வா-ஒ-சியு என்ற பெயரில் சீன தேசத்தின் தலை சிறந்த ஞானி என்றும் கொண்டாடப்படுகிறார்.

 போகர் பல ஆண்டுகள் சீன தேசத்திலிருந்து, தன் தாய் நாடான பாரதத்திற்கு திரும்பும் பொழுது, அவருடன் மூன்று சீடர்களும் ஒரு நாயும் இருந்ததாம். இமய மலைப் பகுதியில் கொடிய கடும் குளிர் காரணமாக, போகர் கடும் குளிரை தாங்குவதற்காக அரிய மூலிகைகளை வைத்து காயகல்ப குளிகைகளை செய்து கொண்டு வந்திருந்தார். அவர் ஒரு குளிகையை எடுத்து தன் நாய்க்கு கொடுத்தார், நாய் குளிகையை தின்றவுடன் மயங்கி கீழே விழுந்தது. பிறகு அவர் சீடரான ஒருவருக்கு கொடுத்தார் அவரும் கீழே மயங்கி விழுந்தார். பிறகு அவர் இரு சீடர்களுக்கும் கொடுத்தார். அவர்கள் அதை சாப்பிடுவது போன்று பாசாங்கு செய்து தன்னுடனே வைத்து கொண்டனர், பிறகு போகர் அந்த குளிகையை சாப்பிட அவரும் மயங்கி கீழே விழுந்தார். அந்த சீடர்கள் அவர் இறந்து விட்டதாக கருதி புலம்பி அழுதனர். சிறிது நேரத்திற்கேல்லாம் நாய், சீடன் மற்றும் போகர் எழுந்து நின்று அவர்கள் பயணத்தை தொடர்ந்தார்களாம். இதை கண்ட அந்த இரு சீடர்களும் வெட்கபட்டு தலை குனிந்தார்களாம். அந்த காய கல்ப மூலிகையின் வேகம் அவர்களை மயக்கம் அடையவைத்து பிறகு உடலில் குளிரை தாங்க பல  மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது . அந்த குளிகையின் சூத்திரம் இன்று நம்மிடம் இருந்தால், குளிர் பிரதேசம் மற்றும் வெளிநாடு செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 போகர் தமிழகம் வந்ததும் நவபாஷாணக்கட்டுக்களால் அருள் மிகு பழநி தண்டாயுதபாணி திருவுருவச் சிலையை செய்தவர் அவரே. அவருக்கு பிறகு அவர் வடித்த அந்த முருகப்பெருமானை பூஜை முதலானவற்றை செய்யுமாறு அவர் சீடரான புலிபானி சித்தரை நியமித்தார். போகரின் ஜீவசமாதி பழனி முருகப்பெருமானின் சந்நிதிக்கு பின்புரமாக இன்றும் உள்ளது.


எங்களுடைய தமிழ் கடல் YouTube செனலை பதிவு செய்து(Subscribe), பல தரப்பட்ட ஜாவா தொழில்நுட்பத்தை தமிழ் வழியில் இலவசமாக கற்று கொள்ளுங்கள் மற்றும் ஆன்மீக பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் கடல் YouTube செனல்


எங்களுடைய ஆங்கில வழி ஐடி தொழில்நுட்பம் YouTube செனலை பதிவு செய்து (Subscribe), இலவசமாக பல ஜாவா தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்
ITGARDEN YouTube செனல்


எங்களுடைய வணிக இணைய தளம் வழியாக பல கைவினை பொருட்களை வாங்கி பயன் பெருங்கள்
PinePad eCommerce site
வணிக இணைய தளம் PinePad YouTube செனல்
PinePad YouTube செனல்


தமிழ் கடலின் புதிய மற்றும் பயனுள்ள பதிவுகளை அறிய கீழ்கானும் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக்கி கொள்ளுமாறு (Facebook Page) தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
கீழே உள்ள லிங்கை click செய்து முகநூல் பக்கதின் உள்ளே நுழைந்து உங்கள் விருப்ப பக்கமாக்கிகொண்டு புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் கடல் முகநூல் பக்கம்


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *